பக்கம்:வாழ்க்கையில் வெற்றி பெற்றவர்களின் கதைகள்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வாழ்க்கையில் வெற்றி பெற்றவர்களின் கதைகள்

17


இங்கிலாந்தை அடைந்த ஸெடான், வாழ்க்கையை மிகவும் சிக்கனமான முறையில் நடத்திக் கொண்டிருந்தார். அவர் சித்திரத் தொழிலை கற்றுக்கொண்டே பிராணி நூல் ஆராய்ச்சியையும் நடத்திக் கொண்டிருந்தார். இங்கிலாந்தில பிராணிகள் சரித்திர நூலகம் ஒன்றிருந்தது அதில் சாதாரணமானவர்களை அனுமதிப்பதே இல்லை. அந்த நூலகம் உலகத்திலேயே மிகப் பெரியது, உன்னதமானது என்று எல்லோரும் சொல்வதைக் கேட்ட ஸெடான் அதில் தான் ஒரு உறுப்பினராக வேண்டும் என்று முயற்சிசெய்தார். அதற்காக இங்கிலாந்தின் பிரதமமந்திரிக்கும், சக்கரவர்த்திக்கும் கூடக் கடிதம் எழுதினார். அவருடைய ஆர்வத்தைக் கண்ட பிரதமமந்திரி நூலக நிர்வாகிகளுக்கு அவரை அனுமதிக்கும்படி கடிதம் எழுதினார்.

இந்த நூலகத்திலிருந்து தான் ஸெடான் வாழ்க்கையே உதயமாயிற்று எனலாம்.

அவர், பல வருஷங்கள் பிராணிகளைப் பற்றி ஆராய்ச்சி நடத்தினார். புதிய புதிய பறவைகள், பிராணிகள் முதலியவற்றைக் கண்டுபிடித்தார். அவைகளைப் பற்றி புத்தகம் ஒன்றை எழுதினார். புத்தகத்தில் உள்ள சித்திரங்கள் எல்லாம் அவராலேயே எழுதப்பட்டவை. அப்புத்தகம் வெளிவந்ததிலிருந்து ஸெடான் புகழ்

2