பக்கம்:வாழ்க்கையில் வெற்றி பெற்றவர்களின் கதைகள்.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

94

வாழ்க்கையில் வெற்றி பெற்றவர்களின் கதைகள்


உதவியும் இவர் செய்யவில்லை. விசாரணை முழுவதிலும் மெளனமே சாதித்தார். சில காலம் கழித்து உண்மை தெரிந்த பிறகு, அந்த ஜூரிகளில் ஒருவர் “ஓ. ஹென்றி நிரபராதி என்பது இப்போது எனக்குத் தெரிந்ததைப் போல், அப்போதே தெரிந்திருந்தால் நான் அவருக்கு எதிராக ஓட் செய்திருக்கவே மாட்டேன்” என்று சொன்னதாக ஹென்றியின் வாழ்க்கைக் குறிப்பில் காணப்படுகிறது.

1898ம் ஆண்டு ஏப்ரல் மாதம் தமக்கு அளிக்கப்பட்ட தண்டனையை அனுபவிக்க ஆரம்பித்தார். “என்னுடைய வாழ்நாளிலேயே நான் ஒன்றையும் திருடியதே கிடையாது. பாங்கியின் பணத்தை நான் கையாடி விட்டதாக என்னை இங்கே வைத்திருக்கிறார்கள். நான் கொஞ்சம் கூட எடுக்கவே இல்லை அதை எல்லாம் வேறு யாரோ எடுத்துக்கொண்டார்கள்” என்று ஓ.ஹென்றி சொன்னதாகச் சிறை டாக்டர் ஜான் தாமஸ் சொல்லியிருக்கிறார்.

முப்பத்தாறு வயதானவராகச் சிறைக்கோட்ம் நுழைந்த இவர், நாற்பது வயதளவில் வெளியே வந்தபோது கைதேர்ந் எழுத்தாளராக மாறி விட்டார். சிறைச்சாலை அவரை ஒன்றும் செய்யவில்லை. அந்த நாற்புறச் சுவருக்குள்ளும் அடங்கியிருந்த அமைதி இவரது சிந்தனைக்கு நீர் வார்த்து வளர்த்துவிட்டது. இவருடைய சிறு கதைகளுக்கு ஏகக் கிராக்கி ஏற்பட்டது. இவருடைய பெயர் மாறியது சிறைக்