பக்கம்:வாழ்க்கை.pdf/141

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
134
வாழ்க்கை
 

குரம்பையாகிய உடல் உண்மையிலேயே காலியாகி விட்டது; இதுவரையில் நான் அவனை எந்த உருவத்தில் கண்டு வந்தேனா அதை இனிக் காண முடியாது. ஆனால் அவன் என் கட்புலனுக்குத் தென்படாமற் போனது அவனிடம் எனக்குள்ள தொடர்பை-உறவை-அழித்துவிடவில்லை. அவனுடைய நினைவு இருக்கிறது.

இந்த நினைவு, அவனுடைய கைகள், முகம், கண்களைப்பற்றிய நினைவன்று; அவனுடைய சூட்சும உருவத்தின் நினைவே யாகும்.

இந்த நினைவு எது? என் சகோதரன் காட்டி வந்த அன்பின் அளவுக்குத் தக்கபடி இது அதிகமா யிருக்கிறது. அவனைப் பற்றிய நினைவு என் வாழ்க்கையை இப்போதும் பாதித்து வருகிறது. அவன் மண்ணுலகில் இருக்கும் போது நடந்தது போலவே, அவன் நினைவால் இப்போதும் என் வாழ்க்கை மாறுதலடைகிறது. என் சகோதரனிட மிருந்த ஜீவ சக்தி அழியவில்லை; குறையவில்லை; உருமாறியிருக்கிறது-அவ்வளவுதான். முன்னைவிட அதிக சக்தியுடன் அது என்னைப் பாதித்து வருகிறது. உயிரோடிருக்கும் மற்ற ஜீவன்கள் என்னைப் பாதிப்பது போலவே, அவன் நினைவும் பாதித்து வருகிறது. எனக்கு அதன் தொடர்பு அற்றுப் போகவில்லை. இப்போது அவன் எங்குள்ளான் என்பது எனக்குத் தெரியாது என்பதால், அவனே இல்லை, ஒன்றும் பாக்கியில்லாமல் முற்றிலும் அழிந்து விட்டான் என்று நான் சொல்ல முடியுமா? அவனுக்கும் எனக்கும் ஏற்பட்டிருந்த தொடர்புகள் இப்போதுதான் அதிகப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாழ்க்கை.pdf/141&oldid=1123855" இருந்து மீள்விக்கப்பட்டது