பக்கம்:வாழ்க்கை.pdf/149

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

142

வாழ்க்கை


ஆற்றல் கண்ணுக்கு ஏற்பட்டால், சமீபத்திலுள்ளதைப் பார்க்க முடியாது போய்விடும். இது போலவே உலக வாழ்வில் அவசியம் காணவேண்டியவைகளை ஆராய்ச்சி அறிவு கண்டு கொள்கிறது. மேற்கொண்டு அறிய அதற்குச் சக்தியில்லை.

மனிதன் இறப்பது மேற்கொண்டு இந்த உலகில் அவனுடைய உண்மையான வாழ்வின் நலன் அதிகரிக்க முடியாது என்பதால்-ஏதோ நோயினாலோ, துப்பாக்கிக் குண்டு பட்டோ, மடிகிறான் என்பதன்று. இவை மிகவும் சமீபமான அண்மைக் காரணங்களாயிருக்கலாம். ஆனால், மூலமான காரணம் மேலே குறித்தது தான். மனிதன் மரிப்பதில் ஆச்சரியமில்லை; ஆனால் உலகில் அவன் உடலோடு வாழ்வது தான் ஆச்சரியம். உடலுக்கு அபாயம் விளைக்கக் கூடிய எத்தனையோ நிலைமைகளுக்கும், எத்தனையோ விஷக் கிருமிகளுக்கும் நடுவே, அவன் வாழ்வது பெரும் வியப்புத்தான். ஆகவே, நாம் வாழ்கிறோம் என்றால், நம்மைப் பற்றி முன்னெச்சரிக்கையோடு இருப்பதாலன்று. ஆனால் உயிரின் காரியம், நம்மில், நம் மூலம், நடைபெறுவதற்காகவே இருக்கிறோம். உடலைப் பேணுவதால் நாம் வாழவில்லை. வாழ்க்கையின் வேலையை நாம் நிறைவேற்றி கொண்டிருப்பதாலேயே நாம் வாழ்கிறோம். இந்த வேலை முடிவடைந்ததும், மனிதனின் மிருக வாழ்வு அழிந்து கெடுவதை எதுவும் தடை செய்ய முடியாது. இந்த அழிவு ஏற்படுகையில் சமீபத்தில் தோன்றும் நோய் நோக்காடு போன்ற சிறு காரணமே நமக்கு முழுக் காரணமாகத் தோன்றும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாழ்க்கை.pdf/149&oldid=1122373" இலிருந்து மீள்விக்கப்பட்டது