பக்கம்:வாழ்க்கை.pdf/150

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
வாழ்க்கை
143
 

வெளியுலகில் எல்லா விஷயங்களிலும் காரணத்தையும் காரியத்தையும் நாம் பார்க்க முடிகிறது. ஆனால், நம் உண்மையான வாழ்க்கையின் காரணத்தையும் காரியத்தையும் நாம் காண முடியாதிருப்பது நம்மைக் கஷ்டப்படுத்துகிறது. ஒவ்வொரு மனிதனும் பலதிறப்பட்ட திறமைகளுடன் ஏன் தோன்றுகிறான்? ஒருவனுடைய வாழ்க்கை நீடித்துக்கொண்டிருக்கும்போது, மற்றொருவனுடைய வாழ்க்கை ஏன் நசித்துப் போகிறது? இந்தக் கேள்விகளுக்குப் பதில் கிடைக்காததால் நாம் வருந்துகிறோம்.

ஆனால், எங்கு, எப்போது, நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை எடுத்துக் காட்ட நமது ஆராய்ச்சி அறிவுக்குத் திறமை இருக்கிறது. வாழ்க்கையின் நலனைப் பெற நம் தனி மிருகப் பண்பு பகுத்தறிவு உணர்ச்சிக்கு அடங்கிச் செல்லும்படி செய்யவே அவ்வறிவு நமக்குப் போதிக்கிறது; இதுவே அழியா நலன்களைப் பெறும் மார்க்கம் என்று காட்டுகிறது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாழ்க்கை.pdf/150&oldid=1122374" இருந்து மீள்விக்கப்பட்டது