பக்கம்:வாழ்க்கை.pdf/157

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

150

வாழ்க்கை


திற்கு என் வாழ்க்கையின் முந்திய பகுதியில் நான் காரணத்தைத் தேடுகிறேன்; மற்ற மனிதர்களுடைய செயல்களின் காரணங்களை ஆராய்கிறேன்; துயரத்தின் காரணத்தைக் கண்டுபிடிக்க - நான் முன் செய்த தவறுகள் அல்லது பாவங்களைக் கண்டுபிடிக்க - நான் முயற்சி செய்கிறேன்; அப்படியானால் தான் துயரத்திலிருந்து விடுபட முடியும். ஆகவே, துயரம் எனக்கு இயற்கையாக ஏற்பட்டுத் தீரவேண்டிய விஷயமென்று தோன்றுவதில்லை. நான் கற்பனை செய்து கொள்வதில் சிறு அளவாயுள்ள துயரமும் பெரிய அளவில் பயங்கரமாகிவிடுகிறது.

மிருகத்தின் துன்பம் மிருக வாழ்வின் சட்டத்தை மீறி நடப்பதால் வருகிறதென்று அது உணரும்; இந்த மீறுதலால் வேதனை ஏற்படுகிறது. வேதனையை நீக்க அது உடனே செயலை மேற்கொள்கின்றது. துன்பத்தின் காரணம் வாழ்க்கையின் சட்டத்தை மீறியதன் விளைவு என்று பகுத்தறிவு உணர்ச்சிக்குத் தெரிகிறது. இதற்குக் காரணமான பாவத்தை உணருவதில், அப்பாவத்தை நீக்குவதே பரிகாரமென்றும் விளங்குகிறது. அதற்குரிய செயலைச் செய்வதே மனிதன் கடமை. மிருகம் தனக்கு ஏற்பட்ட துன்பத்தைக் குறைத்துக் கொள்ள உடனே ஏதாவது செய்துகொள்கிறது. மனிதன் தன் துன்பத்தின் காரணத்தை அறிந்து அதையே நீக்க முற்படுகிறான். இந்த முயற்சி அல்லது செயலே துன்பத்தின் வேதனையைத் தீர்க்கின்றது.

துன்பத்தால் மனிதன் செயல் புரியத் தூண்டப் படுவதையும், அச் செயலால் துன்பத்தின் வேதனை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாழ்க்கை.pdf/157&oldid=1122381" இலிருந்து மீள்விக்கப்பட்டது