பக்கம்:வாழ்க்கை.pdf/27

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
20
வாழ்க்கை
 

ஏற்படும் தோற்றங்களை மட்டும் பார்த்துவிட்டு, உயிரையே ஆராய்வதாக இடைவிடாமல் தம்பட்ட மடிக்கிறது. இந்த ஆராய்ச்சி சிக்கலாயும், பல திறப்பட்டதாயும், குழப்பம் விளைப்பதாயும் இருக்கிறது. இதற்காகச் செலவிடும் நேரமும் முயற்சியும் அளவற்றவை.

இந்த ஆராய்ச்சி, வாழ்க்கையின் ஒரு பகுதியைப் பற்றியதுதான் என்பதை மக்கள் மறந்து விடுகின்றனர். சடப் பொருள், செடிகள், விலங்குகள் இவைகளின் தோற்றத்தில் தெரியும் குணங்களை ஆராய்வதே வாழ்க்கையின் ஆராய்ச்சி என்று அவர்களும் நம்ப ஆரம்பித்துவிடுகின்றனர்.

பொம்மலாட்டத்தில் திரைக்குப் பின்னாலிருந்து காட்டும் பொம்மைகளின் நிழல்கள் ஆடுவது தெரிகின்றது. அந்த நிழல்களைத் தவிர வேறு எதையும் பார்க்கக் கூடாது என்றும், முக்கியமாக எவை நிழல்களுக்குக் காரணமானவையோ அந்தப் பொம்மைகளை எட்டிப் பார்க்கக் கூடாது என்றும், பொம்மைகளே இல்லாமல் நிழல்கள் தாமாகவே உண்டாகிவிட்டன என்றும் பொம்மலாட்டக்காரன் கூறுவது எப்படியோ அப்படித்தான் இருக்கிறது இந்த ஆராய்ச்சி!

போலி விஞ்ஞானம் இக்காலத்தில் இதைத்தான் செய்து வருகிறது. வாழ்க்கையின் முக்கிய லட்சியம் நன்மையடைதல் என்று மனித உணர்வு எடுத்துக் காட்டுகிறது. அந்த லட்சியத்தை ஒதுக்கி விட்டுப் போலி விஞ்ஞானம் ஆராய்ச்சித் திறனில்லாத பாமர மக்களோடு கைகோத்துக் கொண்டு ஆடுகின்றது.

போலி விஞ்ஞானம் கண்டுபிடித்துள்ள வாழ்க்கையின் இலட்சியங்கள் எவை? ஒவ்வொரு மனிதனும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாழ்க்கை.pdf/27&oldid=1122042" இருந்து மீள்விக்கப்பட்டது