பக்கம்:வாழ்க்கை.pdf/41

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
34
வாழ்க்கை
 

கிறான். பிறந்ததிலிருந்து குழந்தையாகவும், வாலிபனாகவும், அறிவு வந்த மனிதனாகவும் இதுவரை தொடர்ந்து வாழ்ந்து வந்ததுபோல் மேற்கொண்டு வாழ முடியாது என்று அவனுக்குச் சந்தேகமின்றித் தெளிவாகிவிடுகின்றது. இத்துடன் அவனுடைய பழைய வாழ்க்கை அறுபட்டு நிற்கிறது.

அறுபட்டு நிற்றல் என்பது வெறும் தோற்றந்தான். அதற்கு முன்னால் அவனுக்கு வாழ்க்கையே இருந்ததில்லை. பகுத்தறிவு உணர்ச்சி தோன்றிய பிறகே அவனுக்கு முந்திய வாழ்வு என்ற பிரக்ஞை உண்டாகியுள்ளது.

குழவிப் பருவத்தில் மனிதன், வாழ்க்கையைப் பற்றி ஒரு கருத்தும் இல்லாமல், மிருகம் போலவே வாழ்ந்திருந்தான். அவன் சிசுவாகப் பத்து மாதம் மட்டும் வாழ்ந்திருந்தால், தன் வாழ்க்கையைப் பற்றியோ, வேறு வாழ்க்கையைப் பற்றியோ, அவன் என்ன தெரிந்திருக்க முடியும் ? கருவிலேயே மடிந்ததிருந்தால் எப்படியோ, அந்த நிலையில் தான் இருந்திருப்பான். பைத்தியம் பிடித்தவனும், முழுமூடனும் குழந்தையைப் போலவே இருக்கின்றனர் ; அவர்கள் தாம் வாழ்வதையோ, பிற உயிர்கள் வாழ்வதையோ அறியமாட்டார்கள். ஆதலால், அவர்கள் மனிதவாழ்வு பெற்றிருப்பதாய்க் கருத முடியாது.

பகுத்தறிவு உணர்ச்சி தோன்றும்போதுதான் மனித வாழ்வு ஆரம்பமாகிறது. அதுவே மனிதனுக்குத் தன் வாழ்வையும், பிறர் வாழ்வையும் எடுத்துக் காட்டுகின்றது ; துன்பங்களும் மரணமும் ஏன் ஏற்படுகின்றன என்பதை விளக்குகின்றது. அதுவே தனிப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாழ்க்கை.pdf/41&oldid=1123799" இருந்து மீள்விக்கப்பட்டது