பக்கம்:வாழ்க்கை.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வாழ்க்கை

43


ஆனால், மனிதனிடம் பகுத்தறிவு உணர்ச்சி தோன்றி வளர்வதை நாம் காண முடிவதில்லை. ஏனெனில், நாமே காட்சிப் பொருளாக இருக்கிறோம்; நம்மிடத்திலேயே இந்த வளர்ச்சி ஏற்படுகின்றது. கண்ணுக்குப் புலனாகாத இந்த உணர்வின் பிறப்பே நமது வாழ்க்கை. விதை தானே தன் முளையைப் பார்க்க முடியாதது போல், நம்முள்ளேயே ஏற்படும் பகுத்தறிவு உணர்ச்சியின் தோற்றத்தையும், அதற்கும் மிருக உணர்ச்சிக்கும் உள்ள புதிய சம்பந்தத்தையும் வேற்றுமைப்படுத்தி நாம் அறிந்துகொள்ள முடிவதில்லை. பகுத்தறிவு உணர்ச்சி தன் மறை டத்திலிருந்து வெளியே தோன்றும்போது, நமக்குள் ஒரு முரண்பாடு இருப்பதாகத் தோன்றுகிறது. விதைக்கும் முளைக்கும் முரண்பாடு எதுவும் இல்லாதது போலவே, இதிலும் முரண்பாடு இல்லை; இருப்பதாகத் தோன்றுவது நமது கற்பனையால் தான். விதைக்கும் முளைக்குமுள்ள சம்பந்தத்தைப் போலவே, மிருக வாழ்க்கைக்கும் புதுப் பிறவியான பகுத்தறிவு உணர்ச்சிக்கும் சம்பந்தம் இருக்கிறது.

மனிதன், தன்னலமே பேணி, மிருக வாழ்க்கை வாழும் மற்ற மனிதர்களும் தன்னைப் போலவே இருப்பதையும், துன்பங்கள் அவர்களைத் தொடர்ந்து செல்வதையும், கொஞ்சம் கொஞ்சமாக மரித்து வருவதே வாழ்வாக இருப்பதையும், பின்னால், பகுத் தறிவு உணர்ச்சியால் ‘நான்’ என்ற அகமாகிய வித்து அழுகிப் போவதையும் காணும்போது, அவனுடைய தனித் தன்மை என்ற மாயை கழன்று விழுந்து விடுகிறது. அவன் தன் வாழ்வு என்பது புதிதாக

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாழ்க்கை.pdf/50&oldid=1122069" இலிருந்து மீள்விக்கப்பட்டது