பக்கம்:வாழ்க்கை.pdf/58

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வாழ்க்கை

51


ஆயினும், இந்த விஷயத்தையும், இது போன்ற விஷயங்களையும் முடிவு செய்வதில்தானே மனித வாழ்க்கை அடங்கியிருக்கிறது!

மிருகங்கள், தாவரங்கள், மற்றைச் சடப் பொருள்களின் ஆராய்ச்சி தேவையில்லை என்று சொல்லவில்லை. மனித வாழ்க்கையை அறிந்து கொள்ள அது மிகவும் இன்றியமையாதது. ஆனால், அந்த ஆராய்ச்சி பகுத்தறிவின் விதியை விளக்குவதையே குறிக்கோளாகக் கொண்டிருக்க வேண்டும். பகுத்தறிவின் விதி என்பது வெறும் பிரமையைத் தவிர வேறில்லையென்று நம்பினால், அந்த ஆராய்ச்சி வீண் வேலைதான். நிழலைப் பார்த்தே பொருளை அறிந்து விடலாம் என்று நம்புதல் உண்மையை நேரில் அறிய முடியாமலே மறைத்துவிடும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாழ்க்கை.pdf/58&oldid=1122086" இருந்து மீள்விக்கப்பட்டது