பக்கம்:வாழ்க்கை.pdf/59

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
5
உண்மை அறிவும் போலி அறிவும்

‘நாம் எவ்வளவு அறிந்திருக்கிறோம், எவ்வளவு அறியாமலிருக்கிறோம் என்பதை அறிந்து கொள்வதே உண்மையான அறிவு. அறியாததை அறிந்துள்ளதாயும், அறிந்ததை அறியாதிருப்பதாயும் எண்ணுவதே போலி அறிவு’ என்று கன்பூஷியஸ் கூறினார். நம்மிடையேயுள்ள போலி அறிவுக்கு இதைப் பார்க்கிலும் சிறந்த விளக்கம் கூறமுடியாது. இக்காலத்துப் போலி விஞ்ஞானம், நாம் அறிய முடியாததை அறிந்துவிட்டதாயும், உண்மையில் நாம் அறிந்துள்ள ஒரே விஷயத்தை அறிய முடியாததாயும் கற்பித்துக் கொள்கிறது. இதனால், மனிதன், காலத்தாலும் இடத்தாலும் தன் முன்பு காணும் எல்லாப் பொருள்களையும் அறிந்திருப்பதாயும், தனது பகுத்தறிவு உணர்ச்சி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாழ்க்கை.pdf/59&oldid=1122088" இருந்து மீள்விக்கப்பட்டது