பக்கம்:வாழ்க்கை.pdf/74

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
வாழ்க்கை
67
 

முதல் இருந்து வருகிறது என்று அவன் ஆலோசித்துப் பார்ப்பான். தொன்றுதொட்டே தனக்கு அந்த இயல்பு உண்டு என்பதை அறிந்து, இடையிடையே அவன் பெறும் தூண்டுதல்களோடு நில்லாது, எப்போதுமே அறிவு உணர்ச்சியைப் பின்பற்றினால் தான் அவனுக்கு வாழ்க்கை உண்டு.

பகுத்தறிவு உணர்ச்சி இருப்பது உண்மை. உண்மையில் இருக்கிறது என்று சொல்லத் தக்கது அது ஒன்று தான். அது எப்போது தோன்றிற்று, எப்போது மறைந்திருந்தது என்று காலத்தைக் கொண்டு அதை ஆராய்தல் தவறு. அதற்கு ஒரு நிமிஷமும் ஐம்பதினாயிரம் ஆண்டுகளும் ஒன்றுதான். அதற்குக் காலக் கணக்குக் கிடையாது. பகுத்தறிவு உணர்ச்சியோ, அதற்கு மனிதன் அடங்கி வாழ்தலோ, காலத்தாலோ, இடத்தாலோ ஏற்படுபவை அல்ல. காலத்திற்கும் இடத்திற்கும் அப்பாற்பட்டு நிறைவேறி வருவதே மனிதனின் உண்மையான வாழ்க்கை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாழ்க்கை.pdf/74&oldid=1122126" இருந்து மீள்விக்கப்பட்டது