பக்கம்:வாழ்க்கை.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வாழ்க்கை

77


கிறானோ, அவன் அதைக் காண்கிறான். அழிய வேண்டியதை, அழிந்துகொண்டே யிருப்பதை, யாரும் பாதுகாக்க முடியாது; அழியக்கூடியதைத் தியாகம் செய்தே அழியாத உண்மை வாழ்க்கையை அடைய வேண்டும் என்பதை இந்த வாக்கியம் வற்புறுத்துகின்றது. உணவை உற்பத்தி செய்து வாழ்க்கையைக் காப்பாற்றிக் கொள்வதற்காக மண்வெட்டி நமக்குக் கிடைத்திருக்கிறது ; அதை உபயோகப் படுத்தாமலிருந்தால், நமக்கு உணவு மில்லாமல் வாழ்வு மில்லாமல் போகும் என்பதை இந்த வாக்கியம் விளக்குகின்றது.

புதிய பிறப்பு

‘நீங்கள் மறுபடி பிறவியெடுக்க வேண்டும்’ என்று கூறினார் கிறிஸ்து நாதர். மனிதன் புதிதாய்ப் பிறக்க வேண்டும் என்று யாரோ கட்டளையிடுவதாக இதற்குப் பொருள் கொள்ளக் கூடாது. அவனுக்கு வாழ்க்கை அவசியமானால், அவன் பகுத்தறிவு உணர்ச்சியுடன் கூடிய வாழ்க்கையில் பிறந்துதான் ஆகவேண்டும்.

அவனுடைய வாழ்க்கை பகுத்தறிவு உணர்ச்சி அவனுக்கு அறிவுறுத்தும் நலனைப் பெற்றிருக்க வேண்டும் என்பதற்காகவே அவ்வுணர்ச்சி மனிதனுக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. தன் வாழ்க்கை இந்த நலனின் அமைந்திருப்பதை ஒருவன் உணர்ந்தால், அவனே உண்மையான வாழ்க்கையைப் பெற்றவன். இந்த நலனில் தன் வாழ்க்கை இல்லை யென்றும், மிருக இயல்பின் நலத்திலேயே தன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாழ்க்கை.pdf/84&oldid=1122153" இலிருந்து மீள்விக்கப்பட்டது