பக்கம்:வாழ்க்கை.pdf/85

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
78
வாழ்க்கை
 

வாழ்க்கை இருக்கிறதென்றும் உணர்பவன் வாழ்க்கையை இழந்தவனாவான். இதுதான் வாழ்க்கையைப் பற்றிக் கிறிஸ்து பெருமான் அருளிய விளக்கம்.

தங்கள் நலத்திற்காக உழைத்தலே வாழ்க்கை என்று எண்ணும் மனிதர்கள் இந்த வார்த்தைகளைக் கேட்கிறார்கள் ; ஆனால் புரித்து கொள்வதில்லை ! அவர்கள் புரிந்து கொள்ளவும் இயலாது. இந்தச் சொற்களுக்குப் பொருளில்லை என்றும், அல்லது இவை முக்கியமில்லை என்றும், இவை உள்ளம் பரவசமான நிலையில் கூறப்பட்ட வெறும் அருள் மொழிகள் என்றும் அவர்கள் நினைக்கிறார்கள். இந்த வார்த்தைகள் ஒரு நிலையை விளக்குகின்றன; அவர்கள் அந்த நிலையில் இல்லாததால், சொற்களின் பொருளை உணர முடியவில்லை. நிலத்துள் நனைந்து ஊறிய தானியம் முளை விடுவதைக் காய்ந்து கிடக்கும் தானியம் அறிந்து கொள்ள முடியாது. ஊறியிருக்கும் தானியத்தின் மேல் கதிரவன் ஒளி காய்ந்தால், ஏதோ கொஞ்சம் ஒளியும் உஷ்ணமும் அதிகமாயிருப்பதாகக் காய்ந்த தானியம் எண்ணிக்கொள்ளும். ஆனால், ஊறிப் பக்குவமா யிருக்கும் தானியத்திற்குத் தான் உயிர்பெற்று வாழ்வதற்கு அந்த ஒளியே காரணமானது என்பது தெரியும். மிருக இயல்புக்கும் பகுத்தறிவு உணர்ச்சி குறிப்பிடும் இயல்புக்கும் முரண்பாடு ஏற்படாத நிலையிலுள்ள மனிதர்களுக்குப் பகுத்தறிவுச் சூரியனுடைய ஒளி முக்கியமானதாய்த் தெரியாது. முளைகட்டிய விதையின் நிலையில் உள்ளவர்களுக்கே அவ்வொளி உயிரளிக்கும் அமுதமாகும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாழ்க்கை.pdf/85&oldid=1122155" இருந்து மீள்விக்கப்பட்டது