பக்கம்:வாழ்விக்க வந்த பாரதி.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74. கண்ணற்ற தீவினிலே-தனிக் காட்டினிற் பெண்கள் புழுங்குகின் ருரந்தக் கரும்புத் தோட்டத்திலே என்று பாரதி பாடியபோது, பிஜித் தீவு இந்தியாவில் பகுதி யல்லவே!" பாரதி, வீரர்; முழுமனிதர்! எனவே, எங்கெங்கு கொடுமைகள் நடந்தாலும் கண்டிக்கும் ஆண்மை அவருக்கு இருந்தது. பிஜித் தீவில் நம் இந்தியப் பெண்கள் என்ன கொடுமைக்கு ஆளானர்கள்? மட்டிக் கங்காணியரும் பிறரும் கற்பழிக்கும் கொடுமைக்குப் பலியானர்கள்? ஏன் அங்கே சென்ருர்கள்? தாயகமா? இல்லை; புக்க்கமா? இல்லை. நம் நாட்டில் தாண்டவமாடும் சாதிக்கொடுமை ஓர் பால்; நிலப்பிரபுக்களின் கொடுமை ஒர்பால்; வறுமையின் கொடுமை ஒர்பால்: இப்படி மூன்று பக்கங்களிலும் தாங் கொணுக் கொடுமைகள். புதிய நாட்டிற்கு ஒடிப்போல்ை வாழ்வு பிறக்குமோ என்று எண்ணி, செந்தமிழ் நாட்டு மக்கள் கூலிகளாகக் சென்ருர்கள். தாய் நாட்டில் மதிப்பிழந்த, ல்ே . த க்களுக்குப் புகுந்த நாட்டில் மட்டும் மதிப்பு வந்துவிடுமா. நெடுந்துரம் வந்துவிட்டார்கள்: திரும்பிப் போக முடியாது; இங்கேதான் ஒடுங்கிக் கிடக்கவேண்டும். என்பதை உணர்ந்த மனித விலங்குகள், காட்டுத் தர்பார் நடத்தினர். மீள வழியின்றி, நம் பெண்கள்