பக்கம்:வாழ்விக்க வந்த பாரதி.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

75 'நெஞ்சங் குமுறுகிருர்-கற்பு நீங்கிடச் செய்யுங் கொடும்ையிலே யந்தப் பஞ்சை மகளிரெல்லாம்-துன்பப் பட்டு மடிந்து மடிந்து மடிந்தொரு தஞ்சமு மில்லாதே-அவர் சாகும் வழக்கத்தை இந்தக் கணத்தில் மிஞ்ச விடலாமோ-ஹே வீரகாளி-சாமுண்டி காளி: கரும்புத் தோட்டத்திலே முன்னணியில் நிற்கும் மக்கள், பேடியர்களாக, கோழைகளாக, ஊமையர்களாக, செவிடர்களாக, குருடர் *களாக, எலும்புகளுக்குக் காத்துக்கொண்டிருக்கும் போது, பாரதி, காளி யைத்தான் கூப்பிட்டாக வேண்டும். பிஜிப் பெண்கள் விம்மி விம்மி அழும் குரலைக்கேட்டுப் பாட அன்று பாரதியிருந்தான். இலங்கையின் அழு குரலைக் கேட்டுப்பாட?... 10 மனிதன் மும்முகங்கொண்டவன். மும்முகங்களி அலும் தெளிவு வேண்டும்; ஒளி வேண்டும். மும்முகங்கள் எவை? மொழி முகம் எறு நாட்டு முகம் மற்றென்று; இன முகம் மூன்ருவது ஆகும். நான் மொழிவழி தமிழன்; நாட்டு வழி இந்தியன்: இனவழியோ? மனிதன். ஆயிரத்து ஐநூறு ஆண்டுகளுக்கு முன்பு, எங்கள் காஞ்சியில் வாழ்ந்த அறிஞரை நிறுத்திக்கேட்டால், என்ன சொல்லியிருப்பார்? -