பக்கம்:வாழ்விக்க வந்த பாரதி.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76 மொழிவழி தமிழன்; நாட்டுவழி பல்லவன்: இனவழி மனிதன்' என்று சொல்லியிருப்பார். அக்கால கட்டத்தில், கூடல்மாநகர வீதியில் ஒருவரை நிறுத்திக் கேட்டால், "நான் மொழியால் தமிழன்; நாட் டால் பாண்டியன்; இனத்தால் மனிதன்” என்று பதிலுரைத்திருப்பார். காரைக்கால் அம்மையாரின் காலத்தில், அவ்வூர்க் குடிமகன் என்ன சொல்லியிருப்பார்? நான் தமிழன்; சோழ நாட்டவன்; மக்கள் இனத்தவன்' என்று பெருமைப் படுவார். இருபதாம் நூற்ருண்டின் தொடக்கத்தில், காரைக் காலரைக் கேட்டால், நான் தமிழன்; பிரஞ்சு இந்தியன்: மனிதன்' என்று பூரித்திருப்பார். "மக்கள் இனத்தவர் நாம்,' என்பது, என்றும் உண்மை; எல்லார்க்கும் ஏற்கும். நாடு மாறுபடலாம், வரலாற்று விபத்துக்களால்; மொழி மாறுபடக் கூடாது, எளிதாக. பாரதியாருடைய மும்முகங்களும் தெளிவாக ஒளி வீசின. அவர் நல்ல தமிழர் நல்ல இந்தியர் நல்ல மனிதர்

தமிழ் மொழிபோல் இனிதாவதெங்கும் காணுேம்' என்று பண்ணிசைத்த பாரதி, செந்தமிழ் நாடெனும் போதினிலே இன்பத்தேன் வந்து பாது காதின்லே' என்று பாடி மகிழ்வித்த பாரதி, தான் மாளிட இனத்தைச் சேர்ந்தவர் என்பதை மறக்கவில்லை.

காக்கை குருவி எங்கள் சாதி' என்று உயிர் ஒருமைப் பாட்டைக் காட்டிய பாரதியார், பிஜித் திவில், இந்துப் பெண்கள் - பெரும்பாலும் தமிழ்ப் பெண்கள்-பட்ட வேதனையை அறிந்து குமுறிப் பாடினர்.