பக்கம்:வாழ்வியல் நெறிகள்.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாக்டர் சி. பாலசுப்பிரமணியன் = 1

இங்குள்ள எல்லாப் பொருள்களையும் விளக்கிக் கூறவில்லை. சிலவற்றை மட்டுமே விரித்துரைக் .கின்றார்.

செறியிலைக் காயா அஞ்சனம் மலர முறியிணர்க் கொன்றை கன்பொன் காலக் கோடற் குவிமுகை, யங்கை யவிழத் தோடார் தோன்றிக் குருதி பூப்பக் கானம் கந்திய செங்கிலப் பெருவழி

என்ற முல்லைப்பாட்டுப் பகுதி உள்ளதை உள்ள வாறே உரைக்கும் கற்பனைத் திறத்திற்குச் சான்றாகும்.

செய்து விட்டன்ன செங்கிலம் நீலத்தன்ன நீர்ப்பொதி கருவின் மாவிசும்பு பறைக்கண் அன்ன கிறைச்சுனை

என்ற அககானுாற்றுப் பகுதியும்,

கருவிளை கண்மலர்போல் பூத்தன கண்ணியல் அஞ்சனங் தோய்ந்தபோற்காயா

என்ற கார்காற்பதுப் பகுதியும்,

மணிபுரை உருவின காயா மாமருண்டன்ன கண்

என்ற முல்லைக்கலியும் உள்ளதை உள்ளவாறே படைத்துக் காட்டும் கற்பனைத் திறத்திற்கும் காட்டு களாகும். குறுக்தொகையிலும் கற்றிணையிலும் இத்தகைய கற்பனையைக் காண முடிவதில்லை.