பக்கம்:வாழ வேண்டுமா.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

39

வாழ்க்கையில் அலைந்து திரிந்த மனிதன் 'அப்பாடா என்று அலுத்துப் படுக்கும் நேரம்தான் அது. இதோ நீ உன் படுக் கையை விரித்துக்கொண்டு விட்டாய்; படுக்க வேண்டும். அதற்குமுன் சற்று உட்கார்ந்து கொள். இல்லாவிட்டாலும் தவ றில்லை. உட்கார்ந்து கொண்டோ, அன்றிப் படுத்துக்கொண்டோ சிறிது நேரம் சிந்தித் துப் பார். சாப்பிட்ட உடனே உனக்குத் தூக்கம் வந்துவிடாது. சாப்பாட்டிற்குப் பின்னும் உறங்குவதற்கு முன்னும் சிறிது நேரமாவது இருக்கும். அந்த இடைவேளை யில் மற்றவற்றையெல்லாம் நீ கினையாது, இன்றைக்குச் செய்த எல்லாச் செயல்களை யும் நினைத்துப் பார்க்கவேண்டும். ஆம்: ஒவ்வொரு மனிதனும் அவ்வாறு நினைத்துப் பார்த்தான் என்ருல் உலகில் எத்தனையோ கொடுமைகள் இல்லாது போகும்.

ஒவ்வொரு மனிதனும் அன்ருடம் தான் செய்த காரியங்களையும் நன்மை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாழ_வேண்டுமா.pdf/9&oldid=645889" இலிருந்து மீள்விக்கப்பட்டது