பக்கம்:வாஷிங்டனில் திருமணம்.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

106 வாஷிங்டனில் திருமணம் அப்பறம் நாரிக் ரூவாஸ் அத்தனை பேரையும் எங்கே இறக்கலாம்? நல்ல பந்தோபஸ்தான இடமாப் பார்த்து இறக்க வேணாமா? ரொம்பக் காஸ்ட்லி ஜ் வெல்ஸ் போட்டிருக்கிறவங்களாச்சே எதுக்கும் துப்பறியும் இலாகாவுக்கு (FB.I.) முன்னாடியே சொல்லி வைக்கறது நல்லது இல்லையா?" என்றாள் மிஸஸ் ராக். 'அதெல்லாம் ஒண்ணும் வேண்டாம். நாரிக்ரூவாஸ் அதெல்லாம் விரும்ப மாட் டாங்க. அவங்க வீட்டுக் குள்ளேயும் தங்க மாட்டாங்க. பேவ் மெண்ட் தான் அவங்களுக்கு வீடு' என்றான் பஞ்சு. ‘'நீ சொல்லிட்டா சரி பஞ்ச் அப்புறம் மேரேஜ் லே இன்னும் என்னென்ன ஐட்டம் இருக்குது?" “காசி யாத்திரை போறது இன்னொரு ஐட்டம். அது ரொம்ப வேடிக்கையாயிருக்கும்' என்று குறுக்கிட்டார் அம்மாஞ்சி. 'அது என்ன அது?’’ 'மாப்பிள்ளை பெனாரஸ் டுர் போறதுக்கு காசி யாத்திரைன்னு பேரு” என்றார் அம்மாஞ்சி. 'மாப்பிள்ளை எதுக்கு பெனாரஸ் டுர் செய்யனும்?... மேரேஜ் டயத்துலே அவர் டுர் போயிட்டா அப்புறம் மேரேஜ் எப்படி நடக்கும்?" 'டுர் போக மாட்டார். கல்யாணத்தன்று மாப்பிள்ளை காசி யாத்திரை புறப்பட்டுப் போவது என்பது எங்க மேரேஜ்லே ஒரு கஸ்டம். அவ்வளவுதான். கொஞ்ச தூரம் போயிட்டு அப்புறம் திரும்பி வந்துவிடுவார். இங்கே அமெரிக்காவிலே பனாரஸ் கிடையாதே! அதனாலே யூனியன் ஸ்டேஷன் பக்கமாகக் கொஞ்சதூரம் போயிட்டுத் திரும்பி வந்துவிடட்டும்' என்றார் அம்மாஞ்சி. 'உங்க மேரேஜ்லே ரொம்பப் பெகூலியர் கஸ்டம்ஸ் எல்லாம் இருக்குதே! எல்லாம் ரொம்ப ரொம்ப வேடிக்கையாயிருக்கும் போல இருக்குதே!”