பக்கம்:வாஷிங்டனில் திருமணம்.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

| சாவி 107 "அதை ஏன் கேட்கிறீங்க? அப்புறம் ஊஞ்சல், மாலை மாற்றுதல், பாலிகை விடுதல், நலங்கு இடுதல் - இப்படி எவ்வளவோ கஸ்டம்ஸ் இருக்குது. இன்னொரு சமாசாரம். சம்பந்தி சண்டைன்னு ஒன்று வரும். அதுதான் கல்யாணத்திலேயே முக்கியமான ஐட்டம்." 'மை காட் எதுக்கும் தாலி கட்டறதிலே ருந்து முன்னாடியே இதுக்கெல்லாம் ஒரு ரிஹர்ஸல் நடத்திப் பார்த்துடலாமே!’ என்றாள் மிஸஸ் ராக். - ‘'வேண்டாம் மேடம் தாலி கட்டறத்துக்கு எல்லாம் ரிஹர்ஸ்ல் நடத்த முடியாது! ஒரு தரம் கட்டினால் கட்டினதுதான். ரியலாத்தான் கட்டணும்." 'அப்படின்னா சரி... இன்னும் மெட்ராஸிலிருந்து என்னென்ன வரணும்?" 'ஸ்ாஸ்ட்ரீஸ் தெளஸண்ட் வடு மாங்காய் ஒன் லாக். தொன்னை ஒன் மில்லியன். சேமியா முன்னுறு ப்ெட்டி" என்றான் பஞ்சு. - 'தெளஸண்ட் ஸாஸ்ட்ரீஸ் கிடைப்பாங்களா?" 'ஒ1 மயிலாப்பூர் டாங்கண்டையே ஐந்நூறு பேர் கிடைப்பாங்க. மாம்பலம் சிவா விஷ்ணு டெம்பிளண்டே முன்னூறு பேர் கிடைப்பாங்க. ட்ரிப்ளிகேன் பிக் ஸ்ட்ரீட் கார்னர்லே இருநூறு பேர் கிடைப்பாங்க. அதெல்லாம் பாப்ஜிக்குத் தெரியும். அசகாய சூரன் பிளேன்லே ஏற்றி அனுப்பிடுவான். ஆகாய விமானத்திலே ட்ராவல் பண்றதுக்கு அநேக சாஸ்திரிகள் ஆசைப்படுவாங்க?' "சரி, வடுமாங்கா ஒன் லாக் வேணுமா?" 'அது ரொம்ப டேஸ்ட்டாயிருக்கும். அதைச் சாப்பிட்டுப் பார்த்தீங்களானா ஒன் லாக் என்ன, ஒன் மில்லியனே வரவழைக்கச் சொல்லுவீங்க."