பக்கம்:வாஷிங்டனில் திருமணம்.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

108 வாஷிங்டனில் திருமணம் | 'என்ன காஸ்ட் ஆகும்?' 'தெளஸண்ட் டென் டாலர்தான்!' 'அவ்வளவுதானா? வெரி சீப் ஒன் க்ரோர் அனுப்பச் சொல்லிடு. ஸ்டாக்லே இருக்கட்டும். அப்புறம்?...' “தொண்னை ஒன் லாக்! தொன்னைங்கறது கப் மாதிரி இருக்கும். அதிலே பாயசம், ரசம் - ஐஸ்க்ரீம் எல்லாம் வெச்சுக்கிட்டுச் சாப்பிடலாம்.' 'பாயசம்னா?’’ 'பாயசம்னா அது ஒரு லிக்விட் ஸ்வீட் சேமியா பாயசம் வில் பி வெரி நைஸ்!' என்றான் பஞ்சு. 'சேமியா பாயசமும் வேண்டாம். ரஷ்யா பாயசமும் வேண்டாம். இண்டியன் பாயசமே போடச் சொல்லு' என்று குறுக்கிட்டாள் லோரிட்டா. "சேமியா என்றால் அது ஒரு தேசம் இல்லை. வர்மி ஸெல்லி...' என்றான் பஞ்சு. 'அப்படியா அப்ப சேமியா பாயசமே செய்யட்டும்' என்றாள் லோரிட்டா. 'டம்பர்ட்டன் ஒக்ஸ் பங்களாவிலே கோல்ட்ஸ்மித்ஸ் ஜ் வெல் ஸ் செய்துகிட்டிருக்காங்க. பார்க்கலாம் வரீங்களா?' என்று அழைத்தாள் மிஸஸ் மூர்த்தி. 'ஓ போய்ப் பார்க்கலாமே! கேதரின், லோரிட்டா, மிஸ் கால் பர்ட், ஹெப்பர்ன், டயானா எல்லாரையும் கூப்பிடுங்க... வரட்டும்' என்றாள் மிஸஸ் ராக். மிஸஸ் ராக்ஃபெல்லரும் அவருடைய உறவினர்களும் டம்பர்ட்டன் ஒக்ஸ் மாளிகைக்குள் நுழைகிறபோதே சந்தன வாசனை கம்மென்று வீசியது. அங்கே போடப்பட்டிருந்த புதிய தென்னங்கீற்றுப் பந்தலின் மணத்துடன் சந்தன வாசனையும் கலந்து வீசியபோது மிஸஸ் ராக்ஃபெல்லருக்கு அந்தக் குளிர்ந்த சூழ்நிலை மிகுந்த உற்சாகத்தை அளித்தது.