பக்கம்:வாஷிங்டனில் திருமணம்.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சாவி 109 'இங்கேதான் ஸ்ாண்டல் வுட் அரைத்துக் கொண்டிருக்கிறார்கள். கல்யாணத்துக்கு வருகிற அத்தனை பேரும் சந்தனம் பூசிக் கொள்வார்கள்' என்றான் பஞ்சு. சந்தனம் அரைப்பவர்களைச் சற்று நேரம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர் மிலஸ் ராக்ஃபெல்லரும் அவருடைய உறவினர்களும். சந்தனத்தைக் கையில் எடுத்து முகர்ந்துவிட்டு, “திஸ் இஸ் ஒண்டர்புல் லவ்லி ஸ்மெல்! இவர்களும் சந்தனம் பூசிக் கொண்டு அரைப்பதுதானே?" என்று கேட்டனர். "அப்புறம் அரைக்கிற சந்தனமெல்லாம் இவர்களுக்குத் தான் சரியாயிருக்கும். நமக்கெல்லாம் மிஞ்சாது' என்றார் அம்மாஞ்சி. 'நகைங்களை பார்க்கலாமா?' என்று கேட்டபடியே கோல்ட்ஸ்மித்துகள் நகை செய்யுமிடத்துக்குச் சென்றாள் மிலஸ் ராக். அங்கே அத்தையும், பிள்ளைக்கு மாமியும் ஆசாரிகளுக்கு அருகிலேயே உட்கார்ந்து கவனித்துக் கொண்டிருந்தனர். அதைக் கண்ட மிஸஸ் ராக்ஃபெல்லர், 'நீங்க நகை செய்யறதைப் பார்த்ததில்லையா? இங்கேயே உட்கார்ந்து கவனித்துக் கொண்டிருக்கிறீர்களே? எங்களுக்குத்தான் இது வேடிக்கை. உங்களுக்குக் கூடவா?' என்று கேட்டாள். ஆச்சாரியிடம் தங்கத்தைக் கொடுத்துவிட்டால் அப்புறம் அப்பால் இப்பால் போக மாட்டார்கள் எங்கள் ஊர்ப் பெண்மணிகள். கண் கொட்டாமல் கவனித்துக் கொண்டே இருப்பார்கள். நகை பேரில் அவர்களுக்கு அத்தனை ஆசை!” என்று மிஸஸ் மூர்த்தி சிரித்துக் கொண்டே கூறினாள். மிஸஸ் ராக்ஃபெல்லருக்கும் அவருடைய உறவினர்களுக்கும் நகைகளைக் கண்டபோது, மகிழ்ச்சி தாங்கவில்லை. எல்லா நகைகளையும் எடுத்துத் தலையிலும், காதிலும், கழுத்திலும் பொருத்தமில்லாமல் வைத்துப் பார்த்துக் குதூகலப்பட்டனர். ஒருத்தி