பக்கம்:வாஷிங்டனில் திருமணம்.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

110 வாஷிங்டனில் திருமணம் ஒட்டியாணத்தைத் தலையிலே மாட்டிக் கொண்டு, 'இது என் தலைக்கு ரொம்பப் பொருத்தமாயிருக்கிறது: என்றாள். - - "ஓ! நீ லேடி நாரிக்ரூவாஸ் மாதிரி இருக்கே!' என்று கூறினாள் மிஸஸ் ராக்பெல்லர். "லேடி நாரிக்ரூவாஸ் என்றால் யார்?' என்று கேட்டனர் அவர்கள். "அவர்கள் இண்டியாவிலிருக்கிறார்கள். பேவ்மெண்ட் ராணிஸ் ரொம்ப அழகாயிருப்பாங்க. பியூட்டிபுல் அண்டு வேல் யுபிள் ஜ்வெல்ஸ் வேர் பண்ணியிருப்பாங்க. டீத் ரொம்ப டார்க்கா யிருக்கும். லேடீஸ் முதுகிலே பெளச் இருக்கும். பெளச்லே குழந்தை இருக்கும். அவங்களைப் பார்த்து டாக்ஸ் பார்க் பண்ணும். அது ரொம்ப வேடிக்கையாயிருக்கும். நெக்ஸ் ட் வீக் ஆயிரம் நாரிக் ரூவாஸ் ப்ளேன்லே வரப் போறாங்க. ஜான்வாஸ்த்துக்கு லைட் துக்கப் போறாங்க' என்றாள் மிஸ்ஸ் ராக். 'ஜாலி, ஜான்வாஸ்லே நாரிக்ரூவாஸ், பார்க்கலாம் : என்று சொல்லிச் சொல்லி மகிழ்ந்தனர் மற்றவர்கள். இந்தச் சமயத்தில், “கர்ட்டன் சார்! உங்களுக்கு ட்ரங்க் கால் வந்திருக்கிறது' என்றார் அம்மாஞ்சி. பஞ்சு திரும்பிப் பார்த்தான். சற்றுத் தொலைவில் ஒய்யாரமாக நின்று கொண்டிருந்த லல்லி புன்னகையோடு பஞ்சுவைக் கை காட்டி அழைத்தாள்.