பக்கம்:வாஷிங்டனில் திருமணம்.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆர். ஸ்ட்ரீட் முழுதும் பந்தல் போட்டு முடித்ததும், ஜோடனைகளில் வல்லவர்களான தஞ்சாவூர் நெட்டி வேலைக்காரர்கள், வாழைத்தார், தென்னங் குருத்து, மாவிலைக் கொத்து, பாக்குச்சரம், சாமந்தி மாலை, காகிதப் பூ, ஜிகினாத் தகடு, சல்லாத் துணி இவ்வளவையும் கொண்டு கம்பக் கால்களையும், கூரை முகட்டையும் அலங்கரித்து முடித்தனர். பாட்டிமார்கள், அந்தத் தெருவெங்கும் பெருக்கி மெழுகி, மாக்கோலம் போட்டு வைத்தார்கள். - "இந்த ஊர் காக்காய் கோல மாவைக் கொத்தித் தின்ன மாட்டேன் என்கிறதே என்று வருத்தப்பட்டாள் அத்தை. 'இதென்ன பிரமாதம் காட்டன் ஸார் கிட்டே சொன்னா, ஒரு நொடியிலே நம் ஊர்க் காக்காய்களைக் கொண்டு வந்து பறக்க விடமாட்டாரா?' என்றார் அம்மாஞ்சி. 'நம் ஊர்க் காக்காய்கள் வந்தாலும் தேவலைதான். குழந்தைகளுக்குச் சாதம் ஊட்டுகிறபோது வேடிக்கை காட்ட ஒரு காக்காய் கூட வரமாட்டேன் என்கிறது' என்றாள் பாட்டி. -