பக்கம்:வாஷிங்டனில் திருமணம்.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

| - சாவி 113 “சாஸ்திரிகளே, பாட்டிகளெல்லாம் பருப்புத் தேங்காய் செய்து முடித்து விட்டார்களா? இப்போது என்ன செய்து கொண்டிருக்கிறார்கள்? பஞ்சு கேட்டான். 'இந்தத் தெருவிலுள்ள வாசல் படிகளுக்கெல்லாம் மஞ்சள் பூசி, குங்குமப் பொட்டு வைத்துக் கொண்டிருக்கிறார்கள். இன்று மாலை அவர்களுக்கு 'சர்க்காரமா பார்க்க வேண்டுமாம். தேனாம்பேட்டையில் 'சர்க்காரமா காட்டியபோது க்யூ வரிசையில் நின்று பார்க்க முடியவில்லையாம்' என்றார் சாஸ்திரிகள். - "இங்கே போய்ப் பார்க்கட்டுமே. அதற்கு நான் என்ன செய்ய வேண்டுமாம்?" 'திரும்பி வரதுக்குக் கார் அனுப்ப வேண்டுமாம்.' 'ஆயிரம் பேருக்கும் கார் வேணுமாமா? பேஷ் வேறே வேலை இல்லே இந்தப் பாட்டிகளுக்கு? சர்க்காரமாவும் வேணாம், ஒண்ணும் வேணாம். 'கிருஷ்ணா ராமா என்று வீட்டோடு இருக்கச் சொல்லும்' என்றான் பஞ்சு. வைதிகாள் கோஷ்டியெல்லாம் எப்படி வராளாம்?" என்று கேட்டார் சாஸ்திரிகள். வைதிகர்கள், சமையல்காரர்கள், நாதஸ்வரக்காரர்கள், கிளாரினட் கோஷ்டியினர் இவ்வளவு பேரும் இரண்டு மணிக்கெல்லாம் வந்துவிடுவார்கள். பூக்கூடை, வெற்றிலைக் கூடை, வடு மாங்காய், வாழைத் தார் இதெல்லாம் திருச்சியிலேருந்து தனி ப்ளேனில் வருகின்றன. வெற்றிலை, சீவல், கறிகாய், புஷ்ப மாலை இந்த நாலுக்கும் மட்டும் - இனிமேல் தினமும் திருச்சியிலே % ருந்து ஸ்பெஷலா ஒரு ப்ளேன் 邀 : விடச் சொல்லியிருக்கேன் என்று கூறிக் கொண்டே வேகமாக 露 நடந்தான் பஞ்சு.