பக்கம்:வாஷிங்டனில் திருமணம்.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

114 வாஷிங்டனில் திருமணம் | 'காட்டன் ஸார் நாளைக்குப் பூ வண்டி வருகிறபோது கொஞ்சம்...' என்று இழுத்தார் அம்மாஞ்சி. பஞ்சு, தன்னுடைய ஆள் காட்டி விரலைக் கட்டை விரல் மீது வைத்து தட்சிணாமூர்த்தி ஸ்வாமி மாதிரி அபிநயம் பிடித்தபடியே, 'பொடிதானே ஐயா, அது ஏற்கெனவே சாவி 115 வந்தாச்சு பாப்ஜி அனுப்பியிருக்கான். அவனும் பொடி போடறவனாச்சே பொடி போடுகிறவர்களின் கஷ்டம் அவனுக்குத் தெரியாதா?' என்றான். "ஆமாம், நாதஸ்வரம் எந்த ஊர் செட் என்று கேட்டார் சாஸ்திரிகள். 'நாமகிரிப் பேட்டை கிருஷ்ணன், ஷேக் சின்ன மெளலானாசாகிப் இவ்விரண்டு செட் வருகின்றன. தவிர, அறந்தாங்கியிலிருந்து உள்ளுர் நாதஸ்வரக்காரர்களும்