பக்கம்:வாஷிங்டனில் திருமணம்.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

116 வாஷிங்டனில் திருமணம் | வருகிறார்கள். அவர்கள்தான் நலங்கு ஊஞ்சலுக்கெல்லாம் வாசிப்பார்கள்' என்றான் பஞ்சு. 'பேஷ் பேஷ் பாண்டு வாத்தியம்?" 'ஏ.ஐ.ஆர். ராதாகிருஷ்ணன்' என்றான் பஞ்சு. 'அதுவும் அபாரமாய்த்தானிருக்கும். அடாடா இந்த வாஷிங்டன் வீதியிலே ராத்திரி பதினொரு மணிக்கு அவா 'சக்கனி ராஜ வாசித்துக் கொண்டு பவனி போறப்போ தேவலோகமாயிருக்குமே...' என்றார் சாஸ்திரிகள். 'அது சரி; ரிஸப்ஷனுக்கு யார் கச்சேரி?' என்று கேட்டார் அம்மாஞ்சி. - 'அரியக்குடி, லால்குடி, பாலக்காடு” என்றான் பஞ்சு. 'பலே, பலே! டாப் கிளாஸ் கச்சேரின்னு சொல்லுங்க. ஒரு டான்ஸுக்கும் ஏற்பாடு பண்ணியிருக்கலாம்' என்றார் சாஸ்திரிகள். - இந்தச் சமயம் கையிலே ஜல்லிக் கரண்டியுடன் அங்கே வந்து நின்ற கும்பகோணம் வைத்தா, 'பஞ்சு ஸார் இன்று சாயந்தரம் என்ன டிபன் போடலாம்?' என்று கேட்டார். 'ராக்ஃபெல்லர் மாமி வெளியே போயிருக்கிறார். அவர் வந்து விடட்டும். அப்புறம் முடிவு செய்யலாம்' என்றான் பஞ்சு. அப்படிச் சொல்லிக் கொண்டிருக்கும்போதே அந்தச் சீமாட்டி, காரிலிருந்து இறங்கி வந்தாள். வரும்போதே, "பஞ்ச், ப்ரொஸெஷனுக்கு ரூட் பர்மிஷன் வாங்கிட்டேன். ஊர்வலத்தை டெலிவிஷன் செய்யறத்துக்கும் ஏற்பாடு - செய்துட்டேன். ஜான்வாசத்துக்குக் காரும் அரேஞ்ச் பண்ணியாச்சு. ஆமாம்; மாப்பிள்ளை ஈவினிங் எத்தனை மணிக்கு வருகிறார்? ரிஸிவ்' பண்றதுக்கு ஏர்போர்ட் போக வேண்டாமா?"