பக்கம்:வாஷிங்டனில் திருமணம்.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சாவி 117 'ஐந்து மணிக்கு வருகிறார். அதுக்கு முன்னாலே நாதஸ்வரக்காரர்கள், பாண்டு வாத்தியக்காரர்கள் எல்லாரும் வராங்க. முதல் லே நான் போய் அவங்களை அழைச்சுக்கிட்டு வந்துடறேன். ' "வெரி குட்! எனக்கும் கொஞ்சம் வேலையிருக்குது. சிக்காகோவிலேருந்து நாளைக்கு என் ரிலேடிவ் லாம், பிரண்ட் ஸ்-சம் வராங்க. அவங்களையெல்லாம் ஹோட்டல்லேதான் இறக்கணும். இன்னும் ரொம்பப் பேர் வரப் போறதா லெட்டரும், தந்தியும் வந்து குவிஞ்சுக்கிட்டே இருக்குது. இதெல்லாம் பார்த்தால், மேரேஜ் டே அன்று வாஷிங்டன்லே ஒரு ஹோட்டல்லே கூட இடம் கிடைக்காது போல இருக்குது. எதுக்கும் இப்பவே போய் ஸ்டேட்லர் ஹில்டன்’, ‘வெடிராடன் பார்க்-ஹோடேல் ', 'மே ப்ளவர் இந்த மூன்று ஒட்டல்களிலும் ரூம்ஸ் ரிஸர்வ் செய்துவிட்டு வந்துடறேன். ஆமாம், கையிலே ஏதோ வெபன் வெச்சுக் கிட்டு நிற்கிறாரே, இவர் யார்?' என்று கேட்டாள் மிஸ்ஸ் ராக். "இவர்தான் ஹெட் குக் வைத்தா. அது வெபன் இல்லை. காராபூந்தி தேய்க்கிற ஜாரணி!' என்றான் பஞ்சு. - 'இவர் இதுக்கு முன்னாலே எங்கே ஒர்க் பண்ணிக்கிட்டிருந்தார்?' - “தாமஸ் குக் அண்ட் ஸ்ன்லே இருந்தார்.' 'ஒ, வெரிகுட் இன்றைக்கு என்ன டிபன் போடச் சொல்லியிருக்கே?' - 'வீட் அல்வாவும், காரலோமாஸும் ே போடச் சொல்லலாம்னு நினைக்கிறேன்" y என்றான் பஞ்சு. 'வீட் அல்வா எதுக்கு ரைஸ் அல்வாவே போடச் சொல்லு. ஸெளத்