பக்கம்:வாஷிங்டனில் திருமணம்.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

118 வாஷிங்டனில் திருமணம் இண்டியாவிலே ரைஸ்தானே முக்கியம்?' என்றாள் மிஸஸ் ராக். "ரைஸ் அல்வா போடலாம். ஆனால் அது டெய்லி சாப்பிட்டு அலுத்துப் போச்சு... அதனாலே ஒரு சேஞ்சுக்கு வீட் அல்வா இருக்கட்டுமே என்று பார்த்தேன்." 'அதுவும் சரிதான்; வீட் அல்வாவே போடட்டும் என்றாள் மிஸஸ் ராக். 'ஒரு நிமிஷம் கார்டன் பக்கம் வlங்களா?' என்று கூப்பிட்டான் பஞ்சு. 'ஹொய்?" என்று கேட்டாள் மிஸஸ் ராக். 'காடி அடுப்பு வெட்டணுமாம். எந்த இடம்னு சொல்லிட்டா அந்த வேலையை முடிச்சுடலாம்' என்றான் பஞ்சு. “ஓபன் ஏர்லயா அடுப்பு வெட்டப் போறிங்க? கண்டபடி புகை வருமே!’ என்றாள் மிஸஸ் ராக். - 'புகை போக்கி கட்டிவிட்டால் போச்சு' என்று கூறினான் பஞ்சு. 'நோ நோ! வாஷிங்டன்லே புகைபோக்கி கட்டக் கூடாது. பாக்டரி மாதிரி ஆயிடும். இது கவர்ன்மெண்ட் ஹெட்குவார்ட்டர்ஸ். அதனாலே, இந்த ஸிடிலே உயரமான கட்டடமோ பாக்டரியோ சிம்னியோ கட்டக் கூடாதுன்னு ஆர்டர்...!" 'சரி மேடம் சிம்னி இல்லாமலேயே கட்டி விடச் சொல்றேன். அந்த மூலையிலே கலாய் •، کو سستہ - 2 பூசறவங்க அடுப்பு போட்டுக்கு сол ППБ135. . . ' ' - 'அது யார் கலாய் பூசறவங்க?" என்று கேட்டாள் மிஸ்ஸ் ராக்.