பக்கம்:வாஷிங்டனில் திருமணம்.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

| சாவி 119 "பாத்திரங்களுக்கெல்லாம் கலாய் பூசல்லேன்னா, ரசம் மோரெல்லாம் ஸ்பாயிலாயிடும். ' 'கலாய் பூசறதுன்னா அது எப்படி?” 'ஈயம் பூசறது மேடம்' "ஈயம் எதுக்கு ஸில்வர் பூசட்டுமே!’ ஸில் வர் பூசலாம். சம்பந்திங்களுக்கு ஈயம்தான் பிடிக்கும். அவங்க ஏதாவது சொல்லுவாங்க. அப்புறம் வீணா மனஸ்தாபத்திலே முடியும்...' ‘'வேண்டாம் வேண்டாம்; சம்பந்திங்க இஷ்டப்படியே செஞ்சுடு. அவங்களுக்கு எதுக்கு குறை?... பஞ்ச் சம்பந்தி சண்டை வரும்னு சொல்லிக்கிட்டிருந்தயே, அது எப்ப வரும்? எனக்கு சம்பந்திச் சண்டை பார்க்கணும் போல ரொம்ப ஆசையாயிருக்கு பஞ்ச் என்றாள் மிஸஸ் ராக். 'அது எப்ப வேணாலும் வரும் மேடம்! பெண் வீட்டாருக்கும் பிள்ளை வீட்டாருக்கும் தகராறு வந்து பெரிய சண்டையிலே முடிஞ்சுடும். அதனாலே கல்யாணமே கூட நின்னு போயிடறதும் உண்டு. ஸெளத் இண்டியாவிலே இது ரொம்பக் காமன்...' ‘'எதுக்கு சண்டை போடுவாங்க?" 'அது அவங்களுக்கே தெரியாது! திடீர்னு சண்டை வரும். அது எப்படி வரும்? எதுக்காக வரும்? எந்த மாதிரி வரும்? எப்படி முடியும்? என்று யாராலும் சொல்லவே முடியாது. ’’ . 'இந்தக் கல்யாணத்திலே கூட வருமா?’’ 'ஒ! எந்தக் கல்யாணத்திலேயும் வரும்!' "பஞ்ச் சண்டை வரச்சே நான் ஒருவேளை தூங்கிக் கிட்டு இருந்தாக்கூட என்னை எழுப்பிவிடு. மறந்துடாதே; சண்டையை நான் பார்க்காமல் மிஸ் பண்ணிவிடக் கூடாது.