பக்கம்:வாஷிங்டனில் திருமணம்.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

120 வாஷிங்டனில் திருமணம் | இவ்வளவு கஷ்டப்பட்டு கல்யாணம் செய்து, சம்பந்தி சண்டை பார்க்கல்லேன்னா என்ன பிரயோஜனம் ஏன் பஞ்ச் ஒரு வேளை சண்டையே வராமல் போயிட்டா... என்று கவலைப்பட்டாள் மிலஸ் ராக். 'கவலைப்படாதீங்க மேடம் கட்டாயம் வரும்' "ஆமாம், கல்யாணப் பெண்ணும் அவங்க கோஷ்டியும் எத்தனை மணிக்கு வராங்க?" s | சாவி 121 “நைட் பதினொரு மணிக்கு வராங்க. வசண்டாவும், அவள் ஹஸ்பெண்டும் கூட ராத்திரி ப்ளேன்லேதான் வராங்க. நாளைக்கு சுமங்கலிப் பிரார்த்தனையாச்சே." 'அவங்களை யார் ரிலீவ் பண்ணப் போறிங்க?" 'நான், லல்லி, அய்யாசாமி, மிஸஸ் மூர்த்தி, கேதரின், லோரிட்டா எல்லோரும் போய் அழைச்சுக்கிட்டு வந்துவிடுகிறோம்.'