பக்கம்:வாஷிங்டனில் திருமணம்.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

122 வாஷிங்டனில் திருமணம் - I 'நானும் வரணுமா, ஏர்போர்ட்டுக்கு?" ‘'வேண்டாம்; ஏற்கனவே நீங்க அலைஞ்சு அலைஞ்சு ரொம்ப டயர்டாப் போயிருக்கீங்க. இந்த ஒரு மாசத்திலே உங்க உடம்பே துரும்பா இளைச்சுப் போச்சு மேடம்' என்றான் பஞ்சு. பட்டுப் புடவை, சரிகை வேஷ் டி எல்லாம் வந்தாச்சா?' "இரண்டாயிரம் ஸாரீஸும், மூவாயிரம் வேஷ்டீல-சம் மார்னிங்கே வந்தாச்சு. காஷ்மீர், பனாரஸ் வெரைட்டி மட்டும் நாளைக்கு வரது. உங்களுக்கு மட்டும் மேடம், ஸ்பெஷல் தறி போடச் சொல்லி ஒரு புடவை வரவழைச்சிருக்கேன். க்வீன் எலிசபெத் இண்டியாவுக்குப் போனப்போ கொடுத்தாங்களே, அந்த மாதிரி ஸாரி என்றான் பஞ்சு. 'வெரிகுட் எங்கே புடவைகளைக் கொண்டு வரச் சொல்லு பார்க்கலாம்' என்று கூறி நாற்காலியில் அமர்ந்து கொண்டாள் மிஸஸ் ராக். பஞ்சு ஒவ்வொரு புடவையாக எடுத்துக் காண்பித்தான். “பியூட்டிபுல் பார்டர்ஸ் அட்ராக்டிவ் கலர்ஸ்' என்று வியந்தாள் மிஸஸ் ராக். "எல்லாம் பதினெட்டு முழம் மேடம் முழம் போட்டுப் பார்க்கிறீங்களா?" "பதினெட்டு முழம்னா எத்தனை யார்ட்?" "ஒன்பது கெஜம்!" - 'ஒன்பது யார்ட்னா ரொம்ப தூரம் நடந்து போய் முழம் போட வேண்டியிருக்குமே. காலையிலேருந்து அலைஞ்சு அலைஞ்சு என் காலெல்லாம் வலிக்குது பஞ்ச் அதனாலே இப்ப என்னாலே ஒன்பது கெஜ தூரம் நடக்க முடியாது” என்று கூறிவிட்டாள் மிஸஸ் ராக்.