பக்கம்:வாஷிங்டனில் திருமணம்.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

142 வாஷிங்டனில் திருமணம் I பஞ்சுவும், ராக்ஃபெல்லர் மாமியும் பந்தலில் உட்கார்ந்து மறுநாள் முகூர்த்தத்துக்கான ஏற்பாடுகளைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தபோது அங்கே வந்த அய்யாசாமி அய்யர் பஞ்சுவை மெதுவாக அழைத்து அவன் காதோடு ஏதோ சொன்னார். பஞ்சுவின் முகம் மாறுவதைக் கண்ட மிஸஸ் ராக்ஃபெல்லர், "வாட் பஞ்ச்?' என்று விசாரித்தாள். 'பிள்ளையின் மாமா ஏதோ தகராறு செய்கிறாராம்: என்றான் பஞ்சு. - 'என்ன சொல்கிறாராம்?" 'இந்த முகூர்த்தம் நடப்பதைப் பார்த்து விடுகிறேன் என்கிறாராம்!" 'நல்லாப் பார்க்கட்டுமே! எல்லோரும் அதைப் பார்க்கத்தானே காத்துக் கொண்டிருக்கிறோம். அவரும் பார்க்கட்டும்!' என்றாள் மிஸஸ் ராக். 'விஷயம் அப்படியில்லை மேடம் சம்பந்திச் சண்டை ஆரம்பமாகிவிட்டது' என்றான் அவன். "ஓ! ஷம்பந்தி ஷண்டய் ஆரம்பமாயிட்டுதா? வெரி க்ளாட் வெரி க்ளாட்!" என்று உற்சாகமாக எழுந்து வேகமாக விரைந்தாள் மிஸஸ் ராக். அவசரம் அவசரமாக டெலிபோனை எடுத்து வைத்துக் கொண்டு தன்னுடைய சிநேகிதர்கள், உறவினர்கள் அத்தனை பேரையும் ஒவ்வொருவராக அழைத்து, "ஷம்பந்தி ஷண்டய் ஸ்டார்ட்டட் ஜஸ்ட் நெள' என்ற செய்தியை அஞ்சல் செய்து கொண்டிருந்தாள்.