பக்கம்:விசிறி வாழை.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குருத்து பத்து 99

பாரதி கேட்டாள் “இத்தனைப் பெரிய கடலைப் படைத்த கடவுள் எதற்காக இந்தக் கடல் நீரை உப்பாகப் படைத் தார். இவ்வளவு உப்புத் தேவையா?”

கொஞ்சம் அதிகம்தான்’ என்று கூறிய ராஜா, சுண்டலில் கரித்த உப்பைச் சகித்துக் கொள்வதுபோல் முகத்தைச் சுளித்துக்கொண்டான்.

பொத்துக் கொண்டு வந்த சிரிப்பைக் கலீர்’ என்று கொட்டி விட்டாள் பாரதி. -

பின்னர், நான் கேட்கிற கேள்விக்குச் சரியாகப் பதில் கூறப் போகிறீர்களா, இல்லையா?’ என்று சற்றுக் கோப மாகக் கேட்டாள்.

“அந்தச் சுண்டல்காரப் பையன் இந்தப் பக்கம் வந்தால் அவனுக்கு நன்றி கூற வேண்டும்.’’ என்றான் ராஜா.

grsir9   ‘உப்பிட்டவரை உள்ளளவும் நினை’ என்பது பழமொழி. இந்தப் பையனே சுண்டலில் டபிள்’ உப்புப் போட்டிருக் கிருன். நம் நன்றியை அவனுக்குத் தெரிவிக்க வேண் t_frupir?”

‘உங்களால் தாமாஷாகப் பேசாமல் இருக்க முடியாது; என்னல் சிரிக்காமலும் இருக்க முடியாது.’

  • நீ சொல்ல நினைப்பதெல்லாம் நான் பேச வேண்டும். நான் பேசும் பேச்சுக்கெல்லாம் நீ சிரிக்க வேண்டும்...?? என்று அப்போதே ஒரு சினிமாப் பாட்டைக் கொஞ்சம் மாற்றிப் பாடினன் ராஜா.

ரொம்ப நன்றாகப் பாடுகிறீர்களே!?? :இப்போது நாம் இரண்டு பேரும் படகில் பயணம் செய்தால் ஒரு டூயட்டே பாடலாம்’ என்றான் ராஜா.

“கடவுள் கடல் நீரை உப்பாகப் படைத்ததற்குக் காரணம் சொல்லாவிட்டால் நான் உங்களுடன் டு: என்றாள் பாரதி.

‘இரண்டு பேர் சேர்ந்தால் டு தான். தனியாக இருந் தால் ஒன்...” என்று கூறிய ராஜா, ‘நாமெல்லாம் ஆண்ட

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:விசிறி_வாழை.pdf/103&oldid=686950" இலிருந்து மீள்விக்கப்பட்டது