பக்கம்:விசிறி வாழை.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

102 விசிறி வாழை

டைதான். இது என்னுடைய கைக்குட்டை, அன்று கல்லூரி யில், நீங்கள் கையை நசுக்கிக் கொண்டபோது, இந்தக் கைக் குட்டையால்தானே கட்டுப்போட்டேன். அப்புறம் இதைத் தாங்கள் திருப்பிக் கொடுக்கவேயில்லே. நல்ல வேளை இப் போது திரும்பி வந்துவிட்டது’’ என்று சிரித்துக் கொண்டே கூறினுள் பாரதி.

‘...நீ ரொம்ப ரொம்ப...’ என்று கூறத் தொடங்கிய ராஜாவின் வார்த்தையை, பொல்லாத பெண். ஆகையால் ரொம்ப ரொம்ப உஷாராயிருங்கள்’’ என்று முடித்துவிட்டு எழுந்திருந்தாள் பாரதி.

‘இதற்குள் ஏன் எழுந்துவிட்டாய், பாரதி?’’ ‘இப்போது மணி என்ன தெரியுமா...எட்டரை!’’ என்று கூறிக்கொண்டே புறப்பட்டாள் பாரதி.

ராஜா வீட்டுக்குத் திரும்பிச் சென்றபோது, மணி ஒன்பது. டாக்ஸி ஒன்றைப் பிடித்துப் பாரதியை அவள் வீட் டில் கொண்டுவிட்டு வருவதற்குள் அவனுக்கு நல்ல பசி எடுத்துவிட்டது. வீட்டுக்குள் நுழையும்போதே பசி பசி’ என்று அலறிக் கொண்டு சமையலறையை நோக்கி விரைந் தான். அங்கு ஞானம் கையில் திருப்புகழை வைத்துக் கொண்டு தன்னுடைய வசத்துக்கு உட்படாத குரலில் பாடிக் கொண்டிருந்தாள்.

“பசி உயிர் போகிறது; என்ன பாட்டு வேண்டியிருக் கிறது?’ என்று கேட்டுக் கொண்டே வந்த ராஜா. ‘அத்தை! சாப்பிட்டாச்சா?’’ என்று கத்தின்ை.

‘அத்தை இங்கே இல்லை; மாடியிலே படித்துக்கொண் டிருக்கிறார்களோ என்னவோ?’ என்றாள்.

‘அத்தை, அத்தை!’’ என்று அழைத்தான் ராஜா. பதில் இல்லாமல் போகவே மாடிக்குப் போய்ப் பார்த்தான். அத்தை அங்கே மேஜைமீது தலையைக் கவிழ்த்துத் தூங்கிக் கொண்டிருந்தாள். -

அத்தை சாப்பிட வரவில்லையா?’ என்ற ராஜாவின் குரல் கேட்டதும், அவள் தலையை நிமிர்த்தி, “எனக்கு வேண்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:விசிறி_வாழை.pdf/106&oldid=686953" இலிருந்து மீள்விக்கப்பட்டது