பக்கம்:விசிறி வாழை.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குருத்து பதினென்று 113

நிகழ்ந்த நிகழ்ச்சிகளோ என்னவோ?

தாம் ஏழைச் சிறுவனக இருந்தபோது பட்ட துன்பங் கள், தன்னை வளர்க்கவும் படிக்க வைக்கவும் தன்னைப் பெற்ற தாய் பட்ட கஷ்டங்கள், வ று ைம யி ன் கொடிய பிடியில் சிக்கிக்கொண்டு தானும் தன் தாயும் அனுபவித்த இன்னல்கள், அப்போது உயர்ந்த நிலையில் வாழ்ந்து கொண்டிருந்தவர்கள், தான் முன்னுக்கு வந்து பெரும் பணத்தைத் திரட்டிக் குவித்தபோது படிப்படியாக மேல் நிலையிலிருந்து கீழ்நிலைக்குத் தாழ்ந்துபோனது, சமூகத் தில் தனக்கு ஒர் உயர்ந்த அந்தஸ்து ஏற்பட்டபோது, தன்னைவிட உயர்ந்தவர்கள் என்று எண்ணிக்கொண்டிருந் தவர்களில் பலர் கீழ்ப் படிக்கு இறங்கியது-இவ்வனவும் அவர் கனவில் தோன்றின.

கடைசியாக அன்று கல்லூரி விழாவில் தன்னை அறிமுகப் படுத்திய பார்வதி, அவர் முன்னுல் தோன்றிப் பேசத் தொடங்கிள்ை.

திருவாளர் சேதுபதியைப்பற்றி நான் புகழப் போவ தில்லை. காரணம் ஏற்கெனவே அவரைப்பற்றி அறிந்து கொண்டுள்ள நமக்கு, அவர் அளித்த நன்கொடை ஒரு பெரிய விஷயமாகத் தோன்றாது. அத்துடன் இப்போது அவரைப் புகழ்ந்தால் அவர் கொடுத்த நன்கொடைக்காகப் புகழ்வதா கத்தான் தோன்றும். ஒருவன் தன் தாயாரை, தன்னைப் பெற்றவள் என்பதற்காக மதிப்புக் கொடுக்காமல், அவன் லேடிஸ் கிளப் பிரஸிடெண்டானவுடன் புகழ்வதைப் போலாகும்.”

இந்த அறிமுகப் பேச்சின்மூலம் சேதுபதியின் உள்ளத் தில் நிரந்தரமான இடத்தைப் பிடித்துவிட்ட பார்வதியை அவர் வெறும் கல்லூரி பிரின்ஸிபாலாக மட்டும் மதிக்க வில்லை. அவளை ஓர் உயர்ந்த பீடத்தில் ஏற்றித் தம்முடைய அந்தஸ்து, கெளரவம், அறிவு, ஆற்றல் இவ்வளவுக்கும் ஈடு கொடுக்கக்கூடிய பெருமை வாய்ந்தவளாகக் கருதினர். அன்று பார்வதி அவரை விமான நிகலயத்துக்குத் தேடிச் சென்று மூக்குக் கண்ணுடியைக் கொடுத்தப்ேது, ஏற் கெனவே அவளைப்பற்றி அவர் கொண்டிருந்த எண்ணம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:விசிறி_வாழை.pdf/117&oldid=686966" இலிருந்து மீள்விக்கப்பட்டது