பக்கம்:விசிறி வாழை.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

180 விசிறி வழை

முடிவுக்கு வரமுடியாமல் தவித்துக் கொண்டிருந்த சேது பதியை உறக்கம் ஆட்கொண்டது.

கல்லூரி அலுவலக அறையில் உட்கார்ந்திருந்த பிரின்ஸி பால் பார்வதி, அன்று வந்த கடிதங்களைப் படித்துக்கொண் டிருந்தாள். அவற்றில் ஒன்று மீனவைப் பற்றியது. ஹாஸ்ட லில் தங்கி பி.ஏ. இறுதி ஆண்டு படித்துக்கொண்டிருந்த மாணவி ஒருத்தியின் பெயர்தான் அது. கல்லூரியிலேயே மிக அழகி என்று பெயரெடுத்தவள் அவள். ஆடம்பரமான ஆடை, பகட்டான ஆபரணங்கள் ஏதுமின்றியே எளிமை யான உடையணிந்து காண்போரைக் கவர்ந்துவிடும் வசீகரக் கவர்ச்சி அவளிடமிருந்தது. இடைவேளையிலோ அல்லது வேறு வேளையிலோ கல்லூரி மாணவிகள் அத்தனை பேரும் தினமும் அவளே ஒரு முறை பார்க்காமல் போக மாட்டார் கள். அவள் ஆடை அலங்காரத்தைப் பற்றியும் தினுசு தினு சாகப் போட்டுக் கொள்ளும் கொண்டைகளைப் பற்றியும் பேசாமல் இருக்கமாட்டார்கள்.

நாகரிகம் என்ற பெயரில் கூந்தலைக் கந்தரித்துக் கொண் டும், குதிரைவால் முடிபோட்டுக்கொண்டும் அலங்கோல மாகச் சிங்காரித்துக் கொண்டும்வரும் மாணவிகளைப் பார் வதிக்குக் கட்டோடு பிடிக்காது. அத்தகைய மாணவிகளை அழைத்துக் கண்டிக்கவும் தவற மாட்டாள். ஆயினும் பார்வதிக்கு மீனவின் அடக்கமான ஆடை அலங்காரத்தில் குற்றம் காண முடியவில்லே.

டென்னிஸ் முதலிய விளேயாட்டுப் போட்டிகளில் பல கல்லூரி மாணவ மாணவிகளே வென்று சாரதாமணிக் கல் லூரிக்குப் பெருமையும் புகழும் தேடித் தந்துள்ள பெருமையும் மீனவுக்கு உண்டு.

கடிதம் மீைைவப் பற்றியது என்பதை அறிந்த பார்வதி, மிக அக்கறையுடனேயே அதைப் படித்து முடித்தாள். அவள் முகத்தில் புன்னகை அரும்பியது.

வேறொரு சமயமாயிருந்தால் கடிதத்தில் இருந்த விஷயம் இதற்குள் பார்வதியை வேங்கையாக மாற்றிச் சீறச் செய் திருக்கும். தன் கல்லூரி கெளரவமே பாழாகி விட்டதாக

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:விசிறி_வாழை.pdf/134&oldid=686985" இலிருந்து மீள்விக்கப்பட்டது