பக்கம்:விசிறி வாழை.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

186 விசிறி வாழை

பார்வதி யோசித்தாள். இதை ஒரு பெரிய விஷயமாக எடுத்துக்கொண்டு திருவாளர் வேதாந்தத்திடம் போக வேண்டியது அவசியந்தான என்றுகூடத் தோன்றியது அவளுக்கு. ஆலுைம் வேதாந்தம் இதைப்பற்றி என்ன எண்ணுகிறர்; என்ன சொல்லுகிறார் என்பதை அறிந்து கொள்ளவும் ஆவல் தூண்டியது.

காலமெல்லாம் கன்னியாகவே வாழ்ந்துவிட்ட பார்வதிக்கு, காதல் கல்யாணம்பற்றிய அனுபவமே இல் லாத பார்வதிக்கு, கல்வியும் கல்லூரியுமே உலகம் என வாழ்நாளை வீணுக்கிவிட்ட பார்வதிக்கு இப்போது ஒரு புதிய உணர்வும் உற்சாகமும் தோன்றியுள்ளன.

இந்த நிலைக்குக் காரணம் சேதுபதிதான். சேதுபதியின் உறவை அவருடைய நட்பை அவள் விரும் பிள்ை; எந்நேரமும் அவர் தன்னுடனேயே இருக்கவேண்டும் என்று எண்ணிள்ை. இந்த ஆசைக்கு, விருப்பத்துக்கு, எண்ணத்துக்கு என்ன காரணம் என்பதை அவளால் கூற முடியவில்லை. சேதுபதியிடமே கூடச் சொல்ல முடியாமல் இரகசியத்தில் மெளனமாக இருந்து வேதனைப்பட்டுக்கொண் டிருந்த பார்வதியின் உள்ளப்போக்கில் இப்போது பெரும் மாறுதல் ஏற்பட்டிருந்தது. -

நிறையப் படித்துள்ள பார்வதிக்கு, பல நூல்களே ஆராய்ந்து பட்டங்கள் பெற்றுள்ள பார்வதிக்கு இத்தனே அறிவும், ஆற்றலும் இருந்தும் தன் சொந்த வாழ்க்கையை மலரச் செய்து கொள்ளத் தெரியவில்லை. அனுபவத்தோடு அறிவு சேருகிறபோதுதான் மலர்ச்சியும் ஏற்படுகிறது. இப்போதுதான் அந்த அனுபவம் அவளுக்குக் கிட்டியிருக் கிறது.

பார்வதி காரைவிட்டு இறங்கும்போதே வாசலில் காத் திருந்த வேதாந்தம் வோருங்கள் வரவேண்டும்...” என்று அகமும் முகமும் மலரக் கைகூப்பி வரவேற்றர்.

முதிர்ந்த தோற்றமும் அறிவின் ஒளிவீசும் கண்களும் அடக்கமும் அமைதியும் கலந்த பண்பாடும் ஒருங்கேசேர்ந்த உருவமே வேதாந்தம் என்ற பெயரைப் பெற்றிருந்தனவோ? ‘தங்கள் வரவு நல்வரவாகுக’ என்ற உபசரிப்புடன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:விசிறி_வாழை.pdf/140&oldid=686992" இலிருந்து மீள்விக்கப்பட்டது