பக்கம்:விசிறி வாழை.pdf/154

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

150 - விசிறி வாழை

சொல்கிருள். ஆகவேதான் புத்தகங்கள் இருக்கும் இடத் திலேயே பாடத்தை நடத்துவதென்று வந்துவிட்டேன்...” ‘எனக்கும்கூட இனி அவ்வளவு வேலை இருக்காது. என் அலுவல்களை யெல்லாம் கவனித்துக் கொள்ளப் பொறுப்பான ஒருவரை நியமித்துவிட்டேன். மாலை வேலை களில் இனி எனக்கும் ஓய்வுதான்...தினமும் ஒரு மணி நேர மாவது நிம்மதியாகப் பொழுதைக் கழிக்கப் போகிறேன். பொருளாலும் புகழாலும் மட்டும் ஒருவன் அமைதியைக் கண்டு விடமுடியாது. கம்பானியன் என்று ஆங்கிலத்தில் கூறுகிறார்களே, அது ரொம்ப ரொம்ப முக்கியம்...”

பாரதி இருவருக்கும் காபி கொண்டுவந்து வைத்தாள். ‘சிற்சில சமயங்களில் நமக்குத் தனிமை வேண்டியிருக் கிறது. சிற்சில சமயங்களில் தனிமை அலுத்துப் போய், யாராவது வரமாட்டார்களா? என்று .ே த ன் றி விடுகிறது.’’ -

பார்வதி பதில் ஏதும் கூருமல் சேதுபதியையே பார்த்துக் கொண்டிருந்தாள்.

‘சரி...நீங்கள் டியூஷனை ஆரம்பியுங்கள்...எனக்கும் கொஞ்சம் அவசர ஜோலியிருக்கிறது. அரை மணியில் திரும்பி வந்துவிடுகிறேன்’ என்று கூறிப் புறப்பட்டார் சேதுபதி. -

அன்றிரவு பார்வதி வெகு நேரம் துனங்காமல், துளக்கமும் வராமல், அமைதியின்றிப் படுக்கையில் புரண்டுகொண்டிருந் தாள். சேதுதிபதி கூறிய வார்த்தைகளை ஒவ்வொன்றாக நினைவுப்படுத்திப் பார்த்து எதற்காக இப்படிப் பேசிஞர். அதன் இரகசியம் என்ன? கம்பானியன்’ என்ற சொல்லுக்கு என்ன பொருள்? இவைபற்றியே அவன் எண்ணம் சுழன்று கொண்டிருந்தது. என்னுடைய து கன ைய மனத்தில் எண்ணியே அப்படிப் பேசியிருக்கிறார். அவருடைய உள்ளத் தில் எனக்கு இடமிருக்கிறது. அவர் என்ன விரும்புகிறார். என் உறவை நாடுகி ஆர். அவருக்கு என்மீது நாட்டமிருக் கிறது. இல்லையென்றால் இம்மாதிரி அவர் பேசியிருக்க மாட்டார். சொற்களைத் தராசில் நிறுத்திப் போட்டு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:விசிறி_வாழை.pdf/154&oldid=687008" இலிருந்து மீள்விக்கப்பட்டது