பக்கம்:விசிறி வாழை.pdf/155

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குருத்து பதினைந்து 151

மிதமாகப் பேசக் கூடியவராயிற்றே! என் உள்ளமும் அவரையே எண்ணி எண்ணி ஏங்குகிறது. அவரை நான் சந்திக்க வேண்டும். சந்தித்து என் உள்ளத்தை அவரிடம் சொல்ல வேண்டும். ஆம்; நாளே காலேயே அவரைச் சந்தித்து என் அந்தரங்கத்தை அவரிடம் கூறி விடுகிறேன். மனம் விட்டுப் பேசி விடுகிறேன். நீண்ட நாட்களாக என் மனத்தில் சுமந்து கொண்டிருக்கும் பாரத்தை இறக்கி விடுகிறேன். அப்போதுதான் எனக்கு நிம்மதி பிறக்கும். நெஞ்சுக்குள் புகுந்து அலைத்துக் கொண்டிருக்கும் வேதனை நீங்கும்.’’ இந்த முடிவு அவளுக்குச் சற்று நிம்மதியைத் தந்தது.

மறுநாள் விடியற்காலேயிலேயே எழுந்துவிட்ட பார்வதி குளிர்ந்த நீரில்குளித்துவிட்டு தேவியின் படத்துக்கு முன்ல்ை போய் நின்று வணங்கிள்ை. தாயே! எனக்கு மனச் சாந்தியைக்கொடு. அவரிடம் என் உள்ளத்தை எடுத்துச் சொல்லும் துணிவைக் கொடு’ என்று வேண்டிக் கொண் டாள். பின்னர், மாடி அறைக்குப் போய்க் கண்ணுடி முன் நின்று, அலங்காரத்தில் ஈடுபட்டாள். தலையைச் சீவிப் பலவிதமான கொண்டைகள் போட்டுப் பார்த்துக் கடைசி யில் எதுவுமே திருப்தியளிக்காததால் வழக்கமாகப்போடும் கொண்டையையே போட்டுக் கொண்டாள். புடவைகளே மாற்றி மாற்றி உடுத்திப் பார்த்தாள். நகைகளை அணிந்து கொண்டு பார்த்தபோது சே! இவ்வளவு படாடோபம் கூடாது. அடக்கமாக, அழகாக, எளிய முறையில் அலங் கரித்துக் கொள்ளவேண்டும். அதுதான் அவருக்குப் பிடிக்கும் என்று தீர்மானித்தாள். கண்ணுடியில் கடைசி முறையாகப் பார்த்துக் கொண்டபோது, மூக்குக்கண்ணுடி அவள் வயதைச் சற்று அதிகமாக எடுத்துக் காட்டுவதுபோல் தோன்றியது.

சே! அப்படி எனக்கு என்ன வயதாகி விட்டது? என்று எண்ணியவள், அந்தச் சந்திப்பு எப்படி இருக்கும் என்பதைத் தனக்குள்ளாகவே கற்பனை செய்து பார்த்துக்கொண்டாள். வெட்கத்துடன் தலே கவிழ்ந்தவண்ணம் தான் அவர் எதிரில் நிற்பது போலவும், தான் கூறுவதைக் கேட்டு அவர் முகம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:விசிறி_வாழை.pdf/155&oldid=687009" இலிருந்து மீள்விக்கப்பட்டது