பக்கம்:விசிறி வாழை.pdf/156

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I 52 விசிறி வாழை

மலர்வது போலவும் அவள் மனக்கண்முன் தோன்றியது. அவள் மெய்சிலிர்த்துப் போளுள்.

அந்த இன்ப நினைவோடு, துணிவான தீர்மானத்தோடு, சேதுபதியைச் சந்திக்கும் நோக்கத்தோடு மாடியிலிருந்து அவசரம் அவசரமாகக் கீழே இறங்கி வந்தாள் பார்வதி.

அச்சமயம் நடு ஹாலில் படித்துக் கொண்டிருந்த ராஜா ‘அத்தை!’’ என்று அழைக்கவே, பார்வதி திரும்பி அவன் அருகே சென்று, ‘என்ன ராஜா?’ என்று விசாரித்தாள்.

“ஒன்றும் இல்ல அத்தை இந்தப் புத்தகத்தை நீங்கள் படித்திருக்கிறீர்களா?’ என்று கேட்டான் ராஜா.

‘'என்ன புத்தகம்?’’ என்று கேட்டபடியே அந்தப் புத்தகத்தைக் கையில் வாங்கிப் பார்த்த பார்வதி, பிக்விக் பேப்பர்ஸ்ா?’ என்று லேசாகச் சிரித்துக் கொண்டாள்.

“ஏன் சிரிக்கிறீர்கள் அத்தை??? ‘பதினேந்து வருஷமாக இதைத் தானே திரும்பத் திரும் பப் படித்துக் கொண்டிருக்கிறேன். கல்லூரியில் இது தானே பாடப்புத்தகம்! இதன் ஆசிரியர் சார்லஸ் டிக்கன்ஸன் ஒரு பெரிய அறிவாளி’ என்றாள்.

ஆமாம். மகா மேதை!’’ என்று கேலியாகக் கூறினன் ராஜா. -

“என்னடா உளறுகிறாய்?’ “நான் உளறவில்லை. டிக்கன்ஸ்தான் உளறியிருக் கிருன். பெரிய அறிவாளியாம்! மேதையாம்! உலகப்புகழ் பெற்ற ஆசிரியராம்! இந்தப் புத்தகத்தில் அவன் எழுதி யிருப்பதைப் பார்த்தீர்களா, கற்பனை யென்ற பெயரில் கண்டதை யெல்லால் எழுதலாம் போலிருக்கிறது. ஐம்பது வயசுக்கிழவன் ஒருவனைக் காதலிக்கிருளாம். ரொம்ப நன்றாயிருக்கிறதல்லவா? இதை பெரிய நகைச்சுவை என்று எழுதியிருக்கிருரா. இல்லை, இயற்கை என்று எழுதியிருக் கிருரா? வாழ்க்கையில் நடக்கக் கூடியதா இது? இதற்குக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:விசிறி_வாழை.pdf/156&oldid=687011" இலிருந்து மீள்விக்கப்பட்டது