பக்கம்:விசிறி வாழை.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12 விசிறி வாழை

தோரணங்களே முதலில் கட்டி முடிக்கலாமா?’ ராஜா ரொம்பப் பழகியவன் போல் பேசின்ை.

‘இதோ நாங்கள் தோரணம் தொடுத்து ரெடியாக வைத்திருக்கிருேம்’ என்றாள் பாரதி.

“இவற்றை எப்படிக் கட்டுவதாம்? இங்கே யாருக்காவது ஏதாவது ஐடியா இருக்கா?’ என்று கேட்டான் ராஜா.

“என்ஜினியர் படிக்கிறவர்களுக்கு இல்லாத ஐடியாவா?” பாரதி வேடிக்கையாகக் கூறிள்ை.

‘என் ஜினியர் என்றால் எல்லாம் தெரிந்திருக்க வேண் டுமா என்ன? ஒரு துறையில் புத்திசாலிகளாயிருந்தால் அவர் களுக்கு உலகத்திலுள்ள அத்தனை விஷயங்களும் தெரிந் திருக்க வேண்டுமென்பதில்லை. அப்படியானுல் சர்ச்சிலுக்கு வேஷ்டி கட்டத் தெரியாது. குருஷ்சாவுக்கு ஹரிகாம்போதி பாடத் தெரியாது’ என்றான் ராஜா.

இந்த ஹாஸ்யத்துக்கு பலமாகச் சிரித்தார்கள் பாரதி யின் சிநேகிதிகள்! அந்தப் பெண்கள் சிரித்ததும் ராஜா வுக்குத் தலே கிறுகிறுத்தது.

சுவர் ஒரமாக ஒரு பெஞ்சை இழுத்துப் போட்டு, அதன் மீது ஒரு ஸ்டூலே எடுத்து வைத்து அதன்மீது ஏறி நின்று கொண்ட அவன், ஆணி எங்கே, சுத்தியல் எங்கே?’ என்று அதிகாரம் செய்தான்.

ஆணிகளையும் சுத்தியலேயும் கொண்டு வந்தாள் பாரதி. ராஜா அவளிடமிருந்து ஆணி ஒன்றை வாங்கிச் சுவரிலே வைத்துச் சுத்தியால் ஓங்கி ஒர் அடி அடித்தான். ஆணி வளைத்துக் கொண்டது !

வளேந்த ஆணியை எரிச்சலோடு கீழே எறிந்துவிட்டு, ‘பரவாயில்லையே! கட்டடம் ரொம்ப ஸ்ட்ராங்காகத்தான் இருக்கிறது. உங்க அப்பா கட்டிக் கொடுத்த கட்டடம் அல்லவா???

‘இது எங்கப்பா கட்டியதில்லை...... கொத்தனர்......?? என்றாள் பாரதி.

ஏதோ அபூர்வ ஹாஸ்யத்தைக் கேட்டு விட்டது போல் அந்தக் கட்டடமே இடிந்து விழுகிற மாதிரி சிரித்தார்கள் அந்தப் பெண்கள். -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:விசிறி_வாழை.pdf/16&oldid=687016" இலிருந்து மீள்விக்கப்பட்டது