பக்கம்:விசிறி வாழை.pdf/165

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குருத்து பதினறு 161

அன்று கல்லூரிக் காம்பவுண்டை நெருங்கியபோது, குட் மார்னிங் பிரின் ஸிபால்’ என்று கூறிக்கொண்டே பார்வதி யின் கார் வருகிறதா என்று திரும்பிப் பார்த்தாள். காரைக் காணவில்லே. கைக் கடிகாரத்தைப் பார்த்தாள். மணி பத்து அடிக்க ஐந்து நிமிஷம் ஏமாற்றத்துடன் சென்று விட்டாள் அகாதா.

வழக்கம்போல் அட்டெண்டர் ரங்கசாமி பத்தடிக்க ஐந்து நிமிஷத்துக்குக் கார்க் கதவைத் திறக்க ஓடிவருகிருன், காரைக் காணவில்லை. முகத்தில் கேள்விக் குறியுடன் திரும்பிச் செல்கிருன்.

சரியாகப் பத்தேகால் மணிக்குப் பார்வதியின் கார் கல்லூரிக் காம்பவுண்டுச் சுவரை நெருங்கியபோது எதிரி லிருந்த காலேஜ் புத்தகக் கடைக்கார அம் மாள் கடிகாரத் தைப் பார்க்கிருள். அது சரியாக ஒடுகிறதா என்ற சந்தேகம் வந்து விடுகிறது அவளுக்கு. பார்வதியின் காரைக் கண்டதும் அவள் கடிகாரத்தின் முள்ளேத் திருப்பிப் பக்கத்து ஐந்து நிமிஷத்துக்கு மாற்றி விடுகிருள். பார்வதியின் கார் வந்தால், மணி பத்தடிக்க ஐந்து நிமிஷம் என்பது அவளுக்கு அவ்வளவு நம்பிக்கை.

பார்வதி இன்று லேட்டாக வந்தபோது அந்தக் கண்களுக்குப் பார்வதியின்மேல் நம்பிக்கை குறையவில்கல், கடிகாரத்தில் பழுது இருப்பதாகவே தோன்றியது.

பார்வதி தன் அறைக்குள் சென்றுகொண்டிருந்தபோது அங்கிருந்த டெலிபோன் மணி அடித்துக்கொண்டிருந்தது, பார்வதி ரிளிவரை எடுத்துக் காதில் வைத்துக் கொண் டாள். சேதுபதியின் குரல் என்ன சேதுபதியா! அவளுக்கு வியர்த்துப் போயிற்று.

  • ஒ, நீங்களா? என்ன வேண்டும்??? பற்றுதல் எதுவு மின்றி உணர்ச்சியற்ற குரலில் பேசினுள் பார்வ .
பாரதி சென்ள்ை, தங்களுக்கு உடம்பு சரியில்லை யென்று...இப்போது எப்படி இருக்கிறது? :

‘'இப்போது ஒன்றுமில்லை...தாங்க்ஸ்.), சட்டென சிலவேரை வைத்துவிட்டாள் பார்வதி.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:விசிறி_வாழை.pdf/165&oldid=687023" இலிருந்து மீள்விக்கப்பட்டது