பக்கம்:விசிறி வாழை.pdf/166

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

f6? விசிறி வாழை

அவள் இதயம் படபடத்தது. இவர் எதற்காக என்இனப்பற்றி விசாரிக்க வேண்டும்? இவரை நான் மறக்க முயன்றாலும் முடியவில்லையே? ஒருவேளை இவர் என்ன நேசிக்கிருரோ? அவர் உள்ளத்தில் எனக்கு இடமளித்திருக் கிருரோ? அவரை நான் மறந்துவிடப் போகிறேன்; அதைப் போல அவரும் என்னை மறந்துவிட வேண்டும். அப்போது தான் நான் திம்மதியுடன் வாழமுடியும்.’’ திடமான, தீர்க்க மான ஒரு முடிவுக்கு வந்தாள் பார்வதி.

மணி மூன்று இருக்கும். பி.எஸ்ஸி. வகுப்புக்கு ஜாக்ரபி போதிக்கும் கடமை அவளை அழைத்தது.

பார்வதி, தன் உடல் நிலையையும் பொருட்படுத்தாமல் தன் கடமையைச் செய்யப் புறப்பட்டாள். மெதுவாக நடந்து வகுப்புக்குள் ங்ழைந்தபோது, அவளுக்குத் தலை சுற்றியது. அதையும் பொறுத்துக் கொண்டு வகுப்புக்குள் துழைத்து மேடைமீது ஏறிள்ை. கால்கள் தடுமாறின. மயக்கமுற்றுக் கீழே சாய்ந்துவிட்டாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:விசிறி_வாழை.pdf/166&oldid=687024" இலிருந்து மீள்விக்கப்பட்டது