பக்கம்:விசிறி வாழை.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14 விசிறி வாழை

பிரின்ஸிபால் பார்வதி தமது அறைக்குள் சென்று நாற்காலியில் அமர்ந்தபோது டெலிபோன் மணி அடித்துக் கொண்டிருந்தது. ரிஸிவரை எடுத்துப் பேசி முடித்ததும் மேஜை மீதிருந்த கல்லூரியின் பொன் விழா அழைப்பிதழ் அவள் கவனத்தைக் கவர்ந்தது. வழவழப்பான காகிதத்தில் சேதுபதி என்ற பெயர் பொன் எழுத்துகளால் பொறிக்கப். பட்டிருந்தன. பார்வதி ஒருமுறை அப் பெயரை நெஞ்சம் நிறையச் சொல்லிப் பார்த்துக் கொண்டாள். இந்தப் பெயரில் என்ன மாய சக்தி இருக்கிறது? இதைக் காணும் போது எனக்கு ஏன் வியர்க்கவேண்டும்?’ என்று தனக்குத் தானே கேட்டுக் கொண்டாள். அவள் சிந்தனை அவரையே சுற்றி வட்டமிட்டது.

  • நாளே விழாவில் இவரை எவ்வாறு அறிமுகப்படுத்திப் பேசுவது? சுருக்கமாக அழகாகப் பேசவேண்டும். வளவள வென்று பேசில்ை அவருக்குப் பிடிக்காது. பேசும்போது குரலில் தடுமாற்றம் இருக்கக்கூடாது. நடுக்கம் தொனிக்கக் கூடாது.”

பார்வதிக்குக் கூட்டமோ சொற்பொழிவோ புதிதல்ல. இதற்குமுன் எத்தனையோ கூட்டங்களில் எவ்வளவோ முறை பேசியிருக்கிருள். அறிவாளிகளின் பாராட்டுதல்களை யும் கரகோஷத்தையும்கூடப் பெற்றிருக்கிருள். ஆனல் நாளைக்குப் பேசப் போவதைக் குறித்து எண்ணும்போதே அவளுக்குச் சற்று யோசனையாக இருந்தது.

வெண்மையான மல்லிகை மலர்களால் சுமக்க முடியாத அளவுக்ருப் பெரிய மாலையாகக் கம்பீரமான அவர் உருவத் துக்கு ஏற்றமுறையில் அழகாகத் தொடுத்துக் கொண்டுவரச் சொல்லி, அறிமுகப் பேச்சு முடிந்ததும்...

...'முடிந்ததும்’ என்று பயங்கரமாக ஓர் எதிரொலி எழுந்தது. பார்வதி பயந்து போய்ச் சுற்றுமுற்றும் பார்த் தாள். வேறு ஒருவருமில்லை. அவள் உள் மனமேதான்!

அறிமுகம் முடிந்ததும் அவர் கழுத்தில் மாலயைச் சூட்டவேண்டும். யார் சூட்டுவது? தன் உள்ளத்தின் அடி வாரத்தில், ஏதோ ஓர் அற்ப ஆசை நிழலாடுவதைப்போல்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:விசிறி_வாழை.pdf/18&oldid=687041" இலிருந்து மீள்விக்கப்பட்டது