பக்கம்:விசிறி வாழை.pdf/193

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குருத்து பத்தொன்பது 189

எஏண்டா இவ்வளவு நேரம் உனக்கு???

எஇன்றைக்கு எங்க காலேஜிலே ஆண்டு விழா... அதனுலே லேட்” என்று பொய் சொன்னன் ராஜா. இல்ல; புளுகின்ை.

ஓகோ ஆண்டு விழாவா? ரொம்ப ஜோராக நடந் திருக்குமே! டீ பார்ட்டி உண்டா? பிரின்ஸிபால் என்ன பேசினர்???

ஆைமாம்; ரொம்ப கிராண்ட்! பிரின்ஸிபால் ரொம்ப நல்லாப் பேசினரு...’ என்று பொய் சொன்னன் ராஜா, இல்லை; புளுகினன்.

அப்புறம் டீ பார்ட்டியிலே என்னடா ஐட்டம்??? “...ம்...மசாலா தோசை!...??

என்னடா உளறுகிறாய்?... டீ பார்ட்டியிலே மசாலா தோசையா?”

ஆமாம், அத்தை! மாணவர்கள் எல்லோரும் சேர்ந்து கேட்டுக் கொண்டோம், மசாலாதோசை வேண்டும் என்று ...’’ என்று பொய் சொன்னன் ராஜா. இல்லை; புளுகின்ை. சரி, லேப்ரரியிலிருந்து புத்தகங்கள் வாங்கி வரச் சொன்னே, வாங்கி வந்தாயா??

“ஓ!’ என்று கூறிய ராஜா, லேப்ரரிப் புத்தகங்கண் எடுத்து அத்தையிடம் கொடுக்க வந்தான். அப்போது அந்தப் புத்தகம் ஒன்றிலிருந்து இரண்டு சினிமா டிக்கெட்டு கள் கீழே உதிர்ந்தன.

‘இதென்னடா சினிமா டிக்கெட்?”

‘யாரோ இதுக்கு முன்னலே இந்தப் புத்தகத்தை லேப்ரரியிலிருந்து வாங்கிக் கொண்டு போனவங்க சினிமாவுக் குப் போயிருப்பாங்க. அவங்க இந்தப் புத்தகத்திலே அந்த டிக்கெட்டுகளை வைத்திருப்பாங்கல் என்றான் ராஜா,

பார்வதிக்கு எல்லாம் புரிந்து விட்டது. அவள் புன் முறுவலோடு அவனை ஏற இறங்கப் பார்த்தாள். அந்தப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:விசிறி_வாழை.pdf/193&oldid=689475" இலிருந்து மீள்விக்கப்பட்டது