பக்கம்:விசிறி வாழை.pdf/199

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குருத்து இருபது 195

“இன்று கூட உன்னைப்பற்றி விசாரித்தார். எங்காவது வெளியூர் போயிருக்கிருரா என்ன? இங்கே வருவதே இல்லையே என்று கேட்டார்.’’

  • நீ என்ன பதில் கூறினய்?” - ‘ஊரில்தான் இருக்கிறார். டெலிபோனில் அடிக்கடி விசாரித்துக் கொண்டிருக்கிறார் என்றேன். நீ இப்போது இங்கு வந்திருப்பது தெரிந்தால் எவ்வளவு சந்தோஷப்படு வார் தெரியுமா அண்ணு? எழுப்பட்டுமா?...?? என்று கேட்டாள் காமாட்சி.

வேண்டாம், வேண்டாம்...அதோ அந்தப் பக்கம் படுத்துக்கொண்டிருப்பது யார்? பாரதியா?...” என்று கேட்டார் சேதுபதி, -

ஆமாம்; பாரதியை எப்போதும் தம் பக்கத்திலேயே தான் படுக்கவைத்துக் கொள்கிறார். பாரதியிடம் எவ்வளவு அன்பு தெரியுமா அண்ணு அவருக்கு?...”

எஒl...சரி காமாட்சி! நான் போய் வருகிறேன். பார்வதி வின் உடம்பை ஜாக்கிரதையாகக் கவனித்துக் கொள். அதற்காகத்தான் உன்னையும், பாரதியையும் இங்கேயே இருக்கச் சொல்லி யிருக்கிறேன்...” சேதுபதியும் காமாட்சி யும் பேசியபடியே மாடிப்படிகளில் இறங்கிச் செல்லும் சத்தம் கேட்கிறது.

தன் கண்களில் படர்ந்த நீர்த்துளிகளைத் துடைத்துக் கொள்கிருள் பார்வதி.

பொழுது விடிந்தது. காமாட்சி ஹார்லிக்ஸுடன் பார்வதியின் அறைக்குள் வரும்போதே, ‘இன்றைக்கு எனக்கு இட்லி சாப்பிட வேண்டும் போலிருக்கிறது. சாயந் தரம் அஞ்சு மணிக்கு எனக்கு இரண்டு இட்லியும் கொஞ்சம் காரமாகத் தக்காளிப் பச்சடியும் செய்யச் சொல்லி ஞானத் திடம் சொல்லி விடுங்கள்’’ என்றாள் பார்வதி.

“அதெல்லாம் சாப்பிட்டால் ஜீரணம் ஆகுமா?...??

பேஷாக ஆகும். எனக்கென்ன ஜுரமா என்ன? ஆஸ்பத்திரியில் உள்ள நோயாளிகளுக்குக்கூட இட்லி கொடுக்கிறார்களே’ என்றாள் பார்வதி, -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:விசிறி_வாழை.pdf/199&oldid=689481" இலிருந்து மீள்விக்கப்பட்டது