பக்கம்:விசிறி வாழை.pdf/224

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

220 விசிறி வாழை

ம்ே...என்னவோ பார்க்கலாம் எனக் கூறிய பார்வதி சற்று நேரம் மெளனமாக இருந்துவிட்டு ராஜா என்று அழைத்தாள்.

‘என்ன அத்தை!?? எனக்குக் கல்லூரியைப் பார்க்க வேண்டும் போல் ஆசையாயிருக்கிறது. தயவுசெய்து என்னேக் காரில் அழைத் துக்oகாண் , போகிருயா?’’

‘என்ன அத்தை இது மணி பதிைென்று அடிக்கப் போகிறது. இராத்திரி வேளே. உங்க உடம்பு இருக்கிற நிலை யிலே வெளியிலே போவதா?”

  • தடங்கல் சொல்லாதே ராஜா! நான் இப்போதே போய்ப் பார்க்க வேண்டும் நீ தான் உதவி செய்யவேண்டும். உன் தோளேப் பற்றிக்கொண்டு நான் மெதுவாகக் கீழே இறங்கி வந்துவிடுகிறேன்...”

‘அத்தை எனக்குப் பயமாயிருக்கிறது. சேதுபதிக்குத் தெரிந்தால் என்னேக் கோபித்துக் கொள்ளுவார்...நான் வர மாட்டேன்...”

‘நீ வரமாட்டாயா ராஜா? கண்டிப்பாய்க் கேட்கிறேன். ஒரே வார்த்தைதான்; சொல்லி விடு. முடியாதா?’’

ராஜாவுக்கு ஒன்றும் புரியவில்லை. தயங்கி ைன், கடைசி யில் அத்தையின் பேச்சைத் தட்ட முடியாமல் சரி அத்தை புறப்படுங்க...’’ என்றான்.

அடுத்த கணமே பார்வதி கட்டிலேவிட்டு மெதுவாக எழுந்தாள். ஞானத்தைத் தவிர, வீட்டில் எல்லோருமே அயர்ந்து துாங்கிக் கொண்டிருந்தனர். -

பார்வதி ஞானத்தை அழைத்து, கல்லூரிக்குப் போய் விட்டு அரை மணியில் திரும்பி வந்து விடுகிறேன். வீட்டைப் பார்த்துக்கொள்’’ என்று புறப்பட்டாள். c ஞானம் தடுக்கவில்லை. வெளியில் புறப்படும்போது தடை யாக எதுவும் சொல்ல விரும்பாததால் மெளனமாகத் தல் யசைப்பதைத் தவிர, அவளால் வேறு ஒன்றும் செய்யமுடிய வில்லே .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:விசிறி_வாழை.pdf/224&oldid=689509" இலிருந்து மீள்விக்கப்பட்டது