பக்கம்:விசிறி வாழை.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குருத்து இரண்டு 2?

மாற்றிக்கொண்டு, அவர் சொல்வதற்கெல்லாம் “ஆமாம்” போட்டுவிடக் கூடாது. அரசியலாயிருந்தால் பிளாட்டோ? விலிருந்து சில கொடேஷன்களையும், பிலாஸபி’ யாயிருந் தால் விவேகானந்தரின் சிகாகோ ஸ்பீச்சிலிருந்து சில பகுதிகளையும் எடுத்துச் சொல்லவேண்டும்.

டெலிபோனில் வந்த செய்தி இவ்வளவையும் தகர்த்து


விட்டது.

கண்களை மூடிய வண்ணம் சிந்தனையில் மூழ்கியிருந்த பார்வதியை அத்தை அத்தை!’ என்று அழைத்துக் கொண்டு வந்த ராஜாவின் குரல் விழிப்படையச் செய் இது:

‘என்ன ராஜா தோரணங்களைக் கட்டி முடித்து விட்டாயா ??? -

‘ஆணியெல்லாம் ரொம்ப வீக் அத்தை கார்ப் பென்ட்டரை எதிரில் பார்த்தேன். தோரணம் கட்டும் வேலையை அவனிடமே ஒப்படைத்து விட்டேன். மூன்று மணிக்கு எனக்கு ஒரு முக்கிய வேலே இருக்கிறது. நான் போய் விட்டு ஆறு மணிக்கெல்லாம் வந்து விடுகிறேன்” என்றான்.

“அந்த முக்கிய வேலை என்னவென்று எனக்குத் தெரியும். மாடினி சினிமாதானே?’ என்று கேட்டாள் அத்தை.


திருவிழாக் கோலம் பூண்டு துலங்கிய அந்தக் கல்லூரி யெங்கிலும் மிதந்து கொண்டிருந்த நாதஸ்வர இசை காற்றிலே கரைந்து கொண்டிருந்தது.

புதிய ஹாஸ்டல் மண்டபத்துக்கு எதிரே வரிசையாகப் போடப்பட்டிருந்த நாற்காலிகளில் நகரத்தின் முக்கிய பிரமுகர்களும் சீமாட்டிகளும் கல்லூரியைச் சேர்ந்த புரொபஸர்களும், லெக்சரர்களும் அமர்ந்திருந்தனர். இடை வெளியில், கல்லூரி மாணவிகள் அணி அணியாகவும் அலங் காரமாகவும் உட்கார்ந்திருந்தனர்.

கனம் நீதிபதியும், திருவாளர் சேதுபதியும் குறித்த நேரத்தில் வந்து சேர்ந்தார்கள். மேடையின் பின்னணியில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:விசிறி_வாழை.pdf/25&oldid=689521" இலிருந்து மீள்விக்கப்பட்டது